திருச்சி மாவட்ட தாசில்தார்களை கூண்டோடு மாற்றிய கலெக்டர் !

0
gif 1

திருச்சியில் தாசில்தார்கள் அதிரடியாக மாற்றம் !

 

மணப்பாறை தாசில்தாரராக இருந்த சித்ரா, திருச்சி மேற்குக்கும், விமான நிலைய விரிவாக்க தனி தாசில்தார் ஞானாமிர்தம், மணப்பாறைக்கும்,  திருச்சி தாசில்தார்  கருணாகரன்  துறையூர் தனி தாசில்தாரராகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி கனிமம் மற்றும் சுரங்கம் தனிதாசில்தார் சிவசுப்பிரமணிய பிள்ளை, கலெக்டர் அலுவலக (குற்றவியல்) மேலாளராகவும், மருங்காபுரி தனி தாசில்தார் வாசுதேவன் திருச்சி சுரங்கம், கனிம தனி தாசில்தாரராகவும், மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா தனி தாசில்தார் சாந்தகுமார், மருங்காபுரி தனி தாசில்தாரராகவும், மாற்றப்பட்டுள்ளனர்.

 

gif 4

ஸ்ரீரங்கம் தனி தாசில்தார் (முத்திரை கட்டணம்) விமான நிலைய விரிவாக்கம் தனி தாசில்தாரராகவும், திருச்சி கிழக்கு தனி தாசில்தார் சாந்தி  ஸ்ரீரங்கம் முத்திரை கட்டண தனி தாசில்தாரராகவும், பொன்மலை நகர்நல வரிதிட்ட  தனி தாசில்தார் சந்திரகுமார், தொட்டியத்திற்கும்,  தொட்டியம் தனி தாசில்தார் ரவிசங்கர் பொன்மலை நகர்நல வரி திட்டத்திற்கும், திருச்சி வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தனி தாசில்தார் மணிகண்டன், திருச்சி முத்திரை கட்டண தனி தாசில்தாரராகவும், இங்கிருந்த ராமசாமி, வழங்கல் , நுகர்வோர் பறக்கும்படை தனி தாசில்தாரராகவும்,  திருச்சி மேற்கு ராஜவேல் திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாரராகவும், இங்கிருந்த  சுமதி திருச்சி கிழக்கு தாசில்தாரராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

 

gif 3

மணப்பாறை டிஎன்பிஎல் தனிதாசில்தார் ரேணுகா,  திருச்சி உதவி ஆணையர்  அலுவலகம் (கலால்)  அலுவலக மேலாளராகவும், இந்த இடத்தில் இருந்த அருள்ஜோதி மண்ணச்சநல்லூர் தனி தாசில்தாரராகவும், திருச்சி கலெக்டர் அலுவலக கூடுதல் வரவேற்பு தாசில்தார் கலைவாணி திருவெறும்பூர் தனி தாசில்தாரராகவும்,  இங்கிருந்த அகிலா கலெக்டர் அலுவலக கூடுதல் வரவேற்பு தாசில்தாராகவும்,  மண்ணச்சநல்லூர் தனி தாசில்தார் சாந்தி, திருச்சி மேற்கு தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.