திருச்சி – புதுக்கோட்டை சாலையில் பயங்கரம்.. அருகே 6 கார்கள் அடுத்தடுத்து மோதல்.. 5 பேர் பலி..

புதுக்கோட்டை திருச்சி சாலையில் நார்த்தாமலை அருகே இருசக்கர வாகனம், கார், அரசு பேருந்து என அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே திருச்சி நெடுஞ்சாலையில் இன்று மாலை மிக கோரமான விபத்து நடந்தது. திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், கார், அரசு பேருந்து என அடுத்தத்து மோதிக்கொண்டன. குறிப்பாக அடுத்தடுத்து 5க்கும் அதிகமான கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சில கார்கள் நெடுஞ்சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில் 5பேர் பலியாகினார்கள்.

போராடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்த குறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினார்.

இதற்கிடையே அப்பகுதி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக திருச்சி புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் யார்? காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.
