அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கையெழுத்து இயக்கபோராட்டம்

0
Business trichy

இந்திய மருத்துவ கழகத்தை கலைக்க கூடாது, மருத்துவ படிப்பில்நெக்ஸ்ட்தேர்வை புகுத்தக்கூடாது, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க கூடாது, புதிய வரைவு கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்

MDMK

கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம், கும்மியடித்தல் என போராட்டங்களை நடத்திய அவர்கள் நேற்று திருச்சி கி..பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். கோரிக்கைகள் அடங்கிய படிவத்தில் முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை கல்வி பயிலும் மாணவமாணவிகளிடம் கையெழுத்து பெற்றனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த ஒரு அறிவிப்பு பலகையிலும் மாணவமாணவிகள் தங்களது பெயர்களை எழுதினார்கள்.

கையெழுத்திடப்பட்ட படிவங்கள் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.