மதுரை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் பொது நல அமைப்புகளைச் சார்ந்த வழக்கறிஞர்கள் குழு முதலைப்பட்டி கிராமத்தில் ஆய்வு

0
Business trichy

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் முதலைப்பட்டி கிராமத்தில் சென்ற வாரத்தில் குளம் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீர்நிலையை காப்பாற்ற போராடிய தந்தை மகன் உள்ளிட்ட இரு விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த வழக்கறிஞர்கள் குழு இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியது.

MDMK

சட்டரீதியாக இந்த வழக்கிற்கு , பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவுவது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உரிய வழிவகை செய்ய வேண்டும் என்றும், நீர்நிலைகளை ஆக்கிரமித்த நிலை கொள்ளையர்களுக்கு துணைபுரிந்து, ஆக்கிரமிப்பை அகற்ற போதிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை பொதுப்பணித்துறை வருவாய் துறை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசிடம் வலியுறுத்துவது குறித்தும் பேசி ஆறுதல் கூறினர்.

மக்கள் கண்காணிப்பகத்தை சேர்ந்த ஆசீர்வாதம் மற்றும் ராஜவேல், தமிழக விவசாயிகள் சங்கம் கட்சி சார்பற்ற மாவட்ட தலைவர் சின்னத்துரை, சுயாட்சி இந்தியா கட்சி அகில இந்திய துணைத் தலைவர் கிறிஸ்டியானா சாமி,வழக்கறிஞர் கென்னடி, வாழ்க விவசாயி இயக்கம், மாநில குழு உறுப்பினர் ராஜசேகர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாநிலச் செயலாளர் பாலன், திருச்சி மாநகர செயலாளர் ரகு, சாமானிய மக்கள் நல கட்சி கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், சமூக நீதிப் பேரவை ரவிக்குமார், கணேசமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.