ரூ.1.87 கோடியில் பொலிவு பெற உள்ள இப்ராஹிம் பூங்கா 

0
Business trichy

திருச்சி மாநகராட்சியை பொலிவுறு நகரமாக்கும் திட்டத்தின் கீழ், மேலரண் சாலையில் உள்ள இப்ராஹிம் பூங்கா ரூ.1.87 கோடியில் புனரமைக்கப்படவுள்ளது.”,

திருச்சி மாநகராட்சியை பொலிவுறு நகரமாக்கும் திட்டத்தின் கீழ், மேலரண் சாலையில் உள்ள இப்ராஹிம் பூங்கா ரூ.1.87 கோடியில் புனரமைக்கப்படவுள்ளது.

web designer

மத்திய அரசின் பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் திருச்சி மாநகராட்சி இடம்பெற்றுள்ளதையடுத்து நகரை அழகுபடுத்தவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கிடவும் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்ட வருகின்றன.

loan point

இதில் முதல் கட்டமாக சுற்றுலா மேம்பாடு, பேருந்து நிலையம் புனரமைத்தல், பூங்கா மேம்பாடு, நீருற்றுகள், புராதன சின்னங்களை அழகுப்படுத்துதல் என ரூ.331 கோடி பணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, மேலும் ரூ.85 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மேலரண் சாலையிலுள்ள இப்ராஹிம் பூங்காவை ரூ.1.87 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

nammalvar

இதன்படி, பூங்காவுக்கு வரும் நபர்கள் பொழுதுபோக்கவும், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் அரைவட்ட அரங்கம் கட்டமைக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது பூங்காவின் மத்தியில் ஒளிரும் வண்ண விளக்குகளுடன் கூடிய நீரூற்று கட்டப்படுகிறது. குழந்தைகள் விளையாட்டுவதற்கென பிரத்யேகமாக குழந்தைகள் பகுதி உருவாக்கப்படுகிறது. இதைத் தவிர யோகா மையம் மற்றும் உடற்பயிற்சி கூடமும் கட்டப்படுகிறது. சாகச விளையாட்டு உபகரணங்களும் நிறுவப்படவுள்ளன.இதுதொடர்பாக, மாநகராட்சி தனி அலுவலரும், ஆணையருமான ரவிச்சந்திரன் கூறியது: மேலரண்சாலையில் உள்ள இப்ராஹிம் பூங்காவை புனரமைக்க ரூ.1.87 கோடியில் மாதிரி திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, பொலிவுறு நகரத்திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.”

IAS academy

Leave A Reply

Your email address will not be published.