மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் தாய் – சேய் ஓய்வறை

0
Business trichy

மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தாய்சேய் ஓய்வறை திருச்சி மாவட்டம் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் சுமார் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான தாய்சேய் ஓய்வறை கடந்த 4ம் தேதி திறக்கப்பட்டது.

ஓய்வறையை திருச்சி சரக காவல் துணை தலைவர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த அறையில், விளையாட்டுப் பொருள்கள், புத்தகங்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையாகவும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஷர்மு, காவல் ஆய்வாளர் .முத்துக்குமார், எம்.ரஷியா சுரேஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஸ்டீபன்குமார், செல்வம், கார்த்திகேயன், ஜோசப், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.