திருச்சி விமானநிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

0
D1

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சி விமானநிலையத்தில் திங்கள்கிழமை முதல் 5 அடுக்கு பாதுகாப்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி முக்கிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியை அதிகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

N2

அதன்படி இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் போலீஸார் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

D2

திருச்சி விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு  பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மோப்ப நாய், வெடிகுண்டு சோதனைக் கருவிகள் மூலமாகவும் பயணிகள் உடைமைகள் சோதனையிடப்பட்டு வருகிறது.

இதேபோல திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு படையினர் தமிழக ரயில்வே போலீஸாருடன் இணைந்து 24 மணிநேரம் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.