திருச்சியில் 7218 தனி நபர் கழிப்பிடம் : மாநகராட்சி ஆணையர் தகவல்

0
Full Page

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோ-அபிசேகபுரம் கோட்டம் 45வது வார்டு மாந்தோப்பு பகுதியில் உள்ள வீடுகளில் கட்டப்பட்ட  தனி நபர் கழிப்பிடத்தை நகரப்பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர் சிவபாதம் ஆகியோருடன்  ஆணையர் இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

Half page

ஆணையர் தெரிவித்ததாவது, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் நோக்கிலும், தூய்மையான பாரதத்தை உருவாக்கும் நோக்கிலும் பாரத பிரதமரால் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு  மத்திய, மாநில அரசுகளின் நிதியின் கீழ்   தனி நபர் கழிப்பிடம் கட்டும் பணியினை மேற்கொள்ள 2016-2017ம் ஆண்டு  1900 வீடுகளுக்கு தனி நபர் கழிப்பிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2017- 2018ஆண்டில் 2148 தனி நபர் கழிப்பிடங்கள் மற்றும் 2018- 2019 ஆண்டில் 3170 தனி நபர் கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு இதுவரை மொத்தம் 7218 தனி நபர்  வீட்டுக் கழிப்பிடம் கட்டிகொடுக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.  இதனால் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை  தெரிவித்தார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.