வீட்டைவிட்டு வெளியேறி ப்ளஸ் டூ தேர்வில் சாதித்த மாணவி-ரேகா

0
1 full

படிப்பில் ஆர்வம் இருக்கிற மாணவர்கள் எப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை வந்தாலும், அதையெல்லாம் தாண்டி நன்கு படித்து விடுவார்கள் என்பதற்கு மாணவி ரேகாதான், சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம். ரேகா, கர்நாடக மாநிலம் சிக்கபல்லப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
கர்நாடகாவில் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு பி.யு.சி படிக்க வேண்டும். இது நம்முடைய ப்ளஸ் டூ-வுக்கு இணையானது. சில தினங்களுக்கும் முன்னாள் `பி.யு.சி இரண்டு’க்கான தேர்வு முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டது. அதில், மாணவி ரேகா, 90.3% சதவிகிதம் மதிப்பெண் எடுத்திருக்கிறார். 90 சதவிகிதத்தில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது…
ரேகா, பத்தாம் வகுப்பில் 74% சதவிகிதம் மதிப்பெண் எடுத்தவர். அவருடைய அம்மா வீட்டு வேலை செய்து வருபவர் என்பதால், மகளை மேலே படிக்க வைக்க முடியாமல் `குழந்தைத் திருமணம்’ செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார். இது பிடிக்காத ரேகா, வீட்டை விட்டே வெளியேறினார்.
கடைசியில் ரேகாவை, பெங்களூருவில் இருக்கிற அவருடைய தோழி வீட்டில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அங்கும் நேரத்தை வேஸ்ட் செய்யாமல், கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்துக் கொண்டிருந்திருக்கிறார் ரேகா. அதன்பிறகு ரேகாவே, குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் 1098-க்கு போன் செய்து, தான் மேலே படிப்பதற்கு உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறார். அவர்களும் செய்ய, படிப்பைத் தொடர்ந்திருக்கிறார். இதோ, `பி.யு.சி இரண்டு’க்கான தேர்வு முடிவில் 542/600 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அடுத்தகட்டமாக, வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியல் படிக்க ஆசைப்படுகிறார். வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, கலெக்டர் ஆக வேண்டும் என்பது என் லட்சியம் என்று தெளிவாகப் பேசுகிறார் மாணவி ரேகா.
வருங்கால கலெக்டருக்கு வாழ்த்துகள்.

3 half

Leave A Reply

Your email address will not be published.