திருச்சியில் காதலனை தாக்கி கல்லூரி மாணவி கற்பழிப்பு

0
Full Page

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் ஒரு கல்லூரியில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவமாணவிகள் படித்து வருகிறார்கள். வெளியூர் மாணவமாணவிகளுக்காக கல்லூரி வளாகத்தில் விடுதியும் உள்ளது.

Half page


இங்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தங்கி என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மத்திய அரசு ஊழியரான இவருடைய தந்தை சென்னை கல்பாக்கத்தில் வேலை செய்து வருகிறார். அந்த மாணவியும், சென்னை கல்பாக்கத்தை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து வந்தனர்.

இந்தநிலையில் விடுதியில் தங்கி இருந்த மாணவி, கடந்த 1-ந்தேதி விடுதியில் இருந்து அனுமதியின்றி வெளியே சென்றார். 2 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவர் தனது காதலனுடன் கல்லூரி முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு, 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்தார். தன்னை போலீஸ் என்று அவர்களிடம் அறிமுகப்படுத்திய அவர், அந்த மாணவியின் காதலனை தாக்கிவிட்டு, மாணவியை கல்லூரி விடுதியில் விடுவதாக கூறி, கல்லூரிக்குள் அழைத்துச்சென்றுள்ளார்.

ஆனால் அந்த வாலிபர், மாணவியை விடுதிக்கு அழைத்துச்செல்லாமல், கல்லூரி வளாகத்திற்குள் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து அந்த மாணவியை தாக்கி, கற்பழித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அந்த வாலிபர் தாக்கியதில் படுகாயம் அடைந்த மாணவியின் காதலன் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மாணவி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், திருவெறும்பூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த மாணவி மற்றும் அவரது காதலன் கூறிய அடையாளங்கள் மற்றும் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த வாலிபரை துவாக்குடி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து துவாக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலை நேரத்தில் காதலனை தாக்கி கல்லூரி மாணவியை கல்லூரி வளாகத்துக்குள் வைத்து கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.