குப்பைகளை உரமாக்கும் மிஷின்

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சங்கீதாஸ் ஓட்டலில் ரூ.15 லட்சம் செலவில் குப்பைகளை உரமாக்கும் மிஷினை மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:
திடக்கழிவு மேலாண்மை குறித்து பல நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்து வாங்கி மறுசுழற்சி செய்ய முடிவு செய்து 32 இடங்களில் நுண்ணுர செயலாக்க மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அரியமங்கலம் குப்பைக்கிடங்குக்கு குப்பைகள் செல்வது ஓரளவு குறைந்து உள்ளது. 50 கிலோவுக்கு அதிகமாக குப்பைகள் சேரும் நிறுவனங்களிடம் குப்பைகளை வாங்குவதில்லை, அபார்ட்மெண்டுகள் மற்றும் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து குப்பைகளை உராமாக்கி மாடித்தோட்டம் அமைத்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அதற்கான இயந்திரங்களை நிறுவ வேண்டும் என்றார். இதற்கான கண்காட்சியையும் 3 முறை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியில், ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
