தொழிற்சாலைகள் உற்பத்திக்கு தொழிலாளர்கள் அற்பணிப்பு உழைப்புதான் காரணம்

0
Full Page

தொழிற்சாலைகள் உற்பத்திக்கு தொழிலாளர்கள் அற்பணிப்பு உழைப்புதான் காரணம்

தொழிற்சாலைகள் உற்பத்திக்கு தொழிலாளர்கள் அற்பணிப்பு உழைப்புதான் காரணம் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப்பொதுச்செயலாளர் மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

¬இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கடந்த ஜீலை 26 ம் தேதி சுக்ராம் சிங் யாதவ், ஸ்ரீ விசாம்பர் பிராசாத் நிசாத், மற்றும் திருமதி சாயா வர்மா இணைந்து பாராளுமன்ற மேலவையில் ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகள் தனியார் மயம் குறித்து எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பீயூஸ் கோயல் பதில்  அளிக்கையில் உற்பத்தி தொழிற்சாலைகளை கார்பேபோரேட் நிருவனங்களாக மாற்ற செயல் திட்டம் தயாரிக்கப்படுகிறது.

Half page

மேலும் நவீன தொழில்நுட்பம், நிர்வாக தன்னாச்சி, மேம்படுத்தப்பட்ட நிர்வாகத்தால் சிறந்த செயல்திறன், ஏற்றுமதி தகுதி, வேலை வாய்ப்பு உருவாக்கம், தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள், சிறு குறு நடுத்தர வர்த்தகம்,  மூலதனம் கவர்தல், ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் உற்பத்தியில் இந்தியாவை சர்வதேச முணையமாக மாற்றுதல் என ஒன்பது காரணங்களை முன் நிறுத்தி இருக்கிறார்.

அதே நேரம் 4200 பெட்டிகள் உற்பத்தி திறன் கொண்ட ரயில் பெட்டி தொழிற்சாலைகள் 6076 பெட்டிகளையும், 500 என்ஜின்கள் உற்பத்தி திறன் கொண்ட தொழிற்சாலைகள் 734 ரயில் என்ஜின்களையும்உற்பத்தி செய்கின்றன என்பதைஎற்றுக்கொண்டு இருக்கிறார். அரசு துறைகளை விட கார்ப்போரேட் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளத.படிப்படியாக தொழிற்சாலைகள் கார்ப்போரேட் நிருவனங்களாக மாற்றப்படும் என தெரிவித்து இருக்கிறார்.

வாரணாசி டீசல் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலை செனகல் ,மலேசியா, மியான்மர், இலங்கை, வியட்நாம் என பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஈரான் நாடு 200 என்ஜின்கள் கோரி இருக்கிறது. நிதியாண்டு 2016-17 வெளி நிருவனங்களிடம் ஈட்டியது ரூ.185 கோடிகடந்த 2018  ம் ஆண்டு இதன் உற்பத்தி323 .என்ஜின்கள். அதே நேரம் பீகாரில் உள்ள அமெரிக்க ஜெனரல் மோட்டார் நிருவனம் பத்து ஆண்டுகளில்தான் 1000 டீசல் என்ஜின்கள் உற்பத்தி செய்துதர இருக்கிறது. சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலை பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம், பங்காளதேஷ் நாடுகளுக்கு பெட்டிகள் ஏற்றுமதி செய்கிறது.ஆண்டு உற்பத்தி 3000 பெட்டிகள். 2016-17 நிதியாண்டு வெளி விற்பனையில் ஈட்டியது.ரூ.1251 கோடி

கபுர்தாலா ரயில்கோச் தொழிற்சாலை, செனகல், மாலி, மியான்மர்  நாடுகளுக்கு ஏற்றுமதியு செய்கிறது. உற்பத்தி 1500 பெட்டிகள். 2016-17 நிதியாண்டு வெளி நிருவனங்களிடம் ஈட்டியது ரூ.248 கோடி. பெங்களரூ ரயில் வீல் தொழிற்சாலை, ஆண்டுக்கு ஒரு லட்சம் அச்சு மற்றும் இரண்டு லட்சம் சக்கரங்கள் தயாரிக்கிறது. 2016-17 நிதியாண்டு வெளி நிருவனங்களிடம் ஈட்டியது ரூ. 37 கோடி. பாட்டியாலா, டீசல் லோகோ மார்டனைசேஷன் ஒர்க்ஸ் தொழிற்சாலை பழைய டீசல் எனஜின்களை புனரமைப்தோடு. ஆண்டுக்கு 60 அல்கோ என்ஜின்கள் மற்றும் 1700 ஏ.சி மின்சார மோட்டார்கள் தயாரிக்கிறது. ரெய்பரேலி மார்டன் கோச் பேக்டரி கடந்த நிதியாண்டு தயாரிப்பு 1425 பெட்டிகள்.

அரசுடைய ரயில்வே தொழிற்சாலைகள் குறைந்த கட்டமைப்பு வசதியில் சாதனைகள் நிகழ்த்தி கார்ப்ரேட் நிருவனங்களை விட சிறப்பாக செயல்படுகின்றன. வெளிமூலதனத்தை ஈர்த்து வருவதோடு எற்றுமதியிலும் சிறந்து விளங்குகின்றன. தகுதிக்கு மீறி தொழிற்சாலைகள் உற்பத்திக்கு தொழிலாளர்கள் அற்பணிப்பு மிக்க உழைப்புதான் காரணம். தொழிற்சாலைகள்தனியார் மயமாக்க ரயில்வே அமைச்சர் முன்வைக்கும் காரணங்கள்ஏற்புடையதல்ல. தொழிலாளர்களை காயப்படுத்துகிறது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.