திருச்சி ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் சான்றிதழ் படிப்பு மீண்டும் தொடக்கம்.

0
Business trichy

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஒருநாள் சான்றிதழ் படிப்பு மீண்டும் தொடங்கியது ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 2017 ஆண்டு வண்ணத்து பூச்சி குறித்த ஒரு நாள் சான்றிதழ் படிப்பு நடத்தப்பட்டது. நிர்வாக காரணங்களால் சில மாதங்கள் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் சான்றிதழ் படிப்பு ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16ஆம் தேதி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

Full Page


மோகன் பிரசாத் வண்ணத்துப்பூச்சி சான்றிதழ் படிப்பு பயிற்சி வகுப்பில் வண்ணத்து பூச்சியில் வான் வண்ணத்திகள், வெண்மஞ்சள் வண்ணத்திகள், தூரிகை நடக்கும் வண்ணத்திகள், நீலன்கள், துள்ளிகள் உள்ளிட்ட 5 குடும்பத்தை சேர்ந்த 103 வகை வண்ணத்துப் பூச்சிகள் வாழ்க்கை குறித்து எடுத்துரைத்தார்.

அதில் வண்ணத்துப்பூச்சியின் வாழ்நாள், முட்டை, லார்வா, பியூபா, ஆண், பெண் அதன் உணவு, வாழ்விடம், இனப்பெருக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். 30க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்பில் பங்கேற்றார்கள். வன அலுவலர் முருகேசன் சான்றிதழ் வழங்கினார்.

Half page

Leave A Reply

Your email address will not be published.