திருச்சியில் பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க அழைப்பு !

0
Business trichy

திருச்சியில் பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க அழைப்பு !

 

Rashinee album

திருச்சி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி புதிய தற்காலிக பட்டாசு கடை சில்லரை வணிகம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.தீபாவளி பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு சில்லரை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008க்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட்  31ம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டியது.

அதன் பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இந்த வாய்ப்பினை சில்லரை வணிகம் செய்வோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.