சித்தன்னவாசலில் சீரழியும் இளம்பெண்கள் -கண்டுக்கொள்ளாத காவல்துறை….

0
1

அதிர வைக்கும் ஒரு ஷாக் ரிப்போர்ட்

புதுக்கோட்டையில் இருந்து 13 கி.மீ தொலைவில் அன்னவாசலின் அருகில் சித்தன்னவாசல் என்ற சுற்றுலா தளமொன்று உள்ளது.

2

கடந்த சில வருடங்கள் முன்பு இங்கு குடும்பத்துடன் வந்து பொழுதை போக்கும் காலமெல்லாம் போய் இன்று பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் இளம்பெண்கள் ,மாணவிகள் காதலனோடு கடலை போடுகின்ற இடமாகும் மற்றும் தவறான வழிமுறைக்கான இடமாகவும் மாறிவிட்டது.

18 வயதை கூட கடக்காத சிறுமிகள் காதலர்கள் என்ற பெயரில் காமுகர்களோடு பஸ்ஸில் இறங்கி வந்து இங்கு செய்கிற அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல.

பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கல்வி பயில வரும் மாணவிகள் பள்ளிக்கூடத்தை பாதியில் கட் அடித்து விட்டு அல்லது அந்த நாள் முழுவதும் பள்ளி கல்லூரிக்கே செல்லாமல் ஒரு நாள் பொழுதை காதலர்களுடன் கழிக்கின்றனர் என்பது தெரிந்ததும் அதிகம் வருத்தமளிக்கிறது.

அங்கு கொஞ்சி குலாவ வந்த சில இளைஞர்களை பிடித்து விசாரிக்கும் போது தான் இன்னும் அதிர்ச்சிகரமான பல சம்பவங்களும் வெளிவந்துள்ளது.

கல்லூரி அல்லது பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகளை ஒரு நாளைக்கு ஒருவன் என மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்வதாகவும் தகவல் வந்துள்ளது.

காதலன் என்ற பெயரில் காமுகன்கள் பள்ளி கல்லூரி மாணவிகளிடம் “நீ தான் எனது உயிர் , நீ இங்கு வராவிட்டால் இறந்து விடுவேன் என்றெல்லாம் ” ஆசை வார்த்தைகள் கூறி தன் இச்சைக்கு அடிபணிய வைக்கின்றனர்.

4

இது குறித்து அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் சீரழிந்து போகுபவர்களிடம் கேட்க்கப்போனால் , காவல்நிலையத்தில் உங்கள் மீதே புகார் கொடுத்து விடுவோம் என்று சொல்லி அங்குள்ளவர்கள் இதற்கு ஆதரவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பெற்றோர்களிடம் பள்ளி கல்லூரிக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வருவதால் பெற்றோர்களுக்கு இது சம்மந்தமாக எந்த தகவலும் தெரியாமல் கவனமற்று விட்டுவிடுகிறார்கள்.

வளர்ப்பிலும் கவனமில்லாமல் ,ஆன்ட்ராய்ட் போன்களையும் வாங்கிக் கொடுத்து பள்ளி கல்லூரிக்கு அனுப்பும் உங்கள் பிள்ளைகள் சீரழிந்து போவதை நீங்கள் தடுக்க நினைத்தால் இனியாவது முழு கண்காணிப்போடு இருங்கள்.

இங்கு வரும் இளைஞர்கள் , இளம்பெண்களிடம் விசாரித்தால் அதில் பலரும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று சிலர் சித்தன்னவாசல் பூங்காவில் செடி, கொடிகள் அடர்ந்த பகுதிகளில் அமர்ந்து அநாகரிக செயல்களில் ஈடுபடுவது, மற்ற சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கின்றது. எனவே அது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சித்தன்னவாசல் நுழைவு வாயிலில் போலீசாரை நிறுத்தவும், பூங்காக்களில் சமணர் படுக்கை, படகு குளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஒரு சமூக ஆர்வலனாய் எங்களது கடமையை நிறைவேற்றி தகவல் தந்துவிட்டோம் , இனி கவனமாக இருக்க வேண்டியது பெற்றோர்களும்…

இந்த பகுதிகளில் முழு கண்காணிப்பாக இருக்க வேண்டியது காவல்துறையும் தான்.

சித்தன்னவாசல் சீரழிந்து போக விடாமல் காக்க வேண்டிய கேடயமாய் ஒரு சமூக ஆர்வலன்…

இவண் – சமூக ஆர்வலன்

3

Leave A Reply

Your email address will not be published.