முக்கொம்பில்  நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

0
Full Page

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தென்னூரை சேர்ந்தவர் சின்னப்பராஜ். இவருடைய மகன் டினோ இன்பன்ட்ராஜ் (வயது 21). இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு எம்.காம் படித்து வந்தார். நேற்று காலை தனது கல்லூரி நண்பர்கள் 8 பேருடன் முக் கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றார்.

அங்கு நண்பர்களுடன் சந்தோஷமாக பொழுதை கழித்த அவர், கடந்த ஆண்டு உடைந்த கொள்ளிடம் அணையை பார்த்துவிட்டு அங்கு தேங்கிய நீரில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.

Half page

நீரில் மூழ்கி சாவு

நண்பர்கள் குளித்துவிட்டு வெளியே வந்தநிலையில் டினோ இன்பன்ட்ராஜ் மட்டும் கரையேறவில்லை. இதனால், பதறிய சக நண்பர்கள் இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய டினோ இன்பன்ட்ராஜை தேடினர். அப்போது அவரை பிணமாக மீட்டனர்.

அவரது உடலை பார்த்து நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர், இறந்த மாணவரின் உடலை வாத்தலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.