பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க  வாகனசோதனை: கலெக்டர் உத்தரவு

0
1

தமிழ்நாட்டில் தற்போது வரை பறவைக்காய்ச்சல் நோய் இல்லை. கர்நாடக மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டு பரவாமல் இருக்க அந்த மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் அனைத்து சுங்கச்வாவடிகளிலும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கடும் சோதனைக்கு பிறகு மாவட்டத்தில் நுழைவதற்கு அனுமதி வழங்கிட வேண்டும். வனத்துறையினர் நீர் குட்டைகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் பறவைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட வெளிமாநில மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் ஏதேனும் தென்படுகிறதா? என்பதை வனத்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

கோழி இறைச்சிக்கடைகள் மற்றும் இறைச்சிக்கூடங்களில் மாநகராட்சி ஆணையர் தீவிர பரிசோதனை செய்ய வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் கோழி மற்றும் காகம் இறந்து கிடந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பறவைக்காய்ச்சல் நோய்க்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைத்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

2
4

70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை சாப்பிடலாம் என சமூக நலத்துறையினர் பொதுமக்களுக்கு வலியுறுத்த வேண்டும். பச்சை முட்டை மற்றும் அரை வேக்காட்டுடன் கூடிய முட்டைகளை சாப்பிடக்கூடாது. முழுமையாக பொறித்த மற்றும் அவித்த முட்டைகளை சாப்பிடலாம். முட்டைகளை முழுமையாக வேகவைத்து சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் வழங்கிட அறிவுறுத்த வேண்டும்.

நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் கோழி வளர்ப்போர் கோழிகளையும், தங்களையும் இந்நோய் தாக்காமல் இருக்க முழுமையாக சுகாதார முறைகளை கண்டிப் பாக கடைப்பிடிக்க வேண்டும். பறவைக்காய்ச்சல் நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும் என்றார் .

3

Leave A Reply

Your email address will not be published.