திருச்சியில் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க கப்பம் கட்ட சொல்லும் மின்வாரிய அதிகாரி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் திருச்சி மின் பகிர்மான வட்டம் மலைக்கோட்டை பிரிவு உதவி செயற்பொறியாளராக இருந்து வருபவர் சசிகுமார்,
இவரது கட்டுப்பாட்டில் மலைக்கோட்டை பிரிவு, மெயின்கார்டு கேட் பிரிவு,மற்றும் சிந்தாமணி பிரிவுகள் உள்ளன. இவர் கட்டுப்பாட்டில் உள்ள பிரிவுகளிலிருந்து வீடு கட்டுவதற்கு மின் இணைப்பு கேட்டு யாரவது விண்ணப்பித்தால் இவரிடம் சென்று ஒரு ன்னப் (பதிவு செய்து அனுமதி சீட்டு) வாங்கி வந்தால் தான் உதவி மின் பொறியாளர் பதிவு செய்ய வேண்டுமாம், இல்லையென்றால் பதிவு செய்யக்கூடாது என்று புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

மேலும் 1000 சதுர அடி வீடு கட்டுவதற்கு 1000 ரூபாயும், 1000 சதுர அடிக்கு மேல் வீடுக்கட்டுவோருக்கு 2000 ரூபாயும் இவருக்கு தனியாக கப்பம் கட்ட சொல்கிறாராம். அதற்காக தான் திருச்சியில் உள்ள எந்த ஒரு மின் பகிர்மான பிரிவுகளிலும் இல்லாத புதிய விதிமுறையை அமல் படுத்தியிருக்காராம். இவருக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகள் மீது புகார் ஏதும் வந்தால் அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் அதிகாரியான சசிகுமாரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்டு பேசியபோது…. அதில் அவர் என் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்து வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் நபர்கள் என்னை பார்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை, அவர்கள் நேரடியாகவே அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியை பார்க்கலாம், மேலும் இதுதொடர்பாக நான் யாரிடமும் எந்த ஒரு பணமும் கேட்டதும் இல்லை வாங்கியதும் இல்லை, எந்த ஒரு கடவுச்சீட்டும் நான் அளிக்கவில்லை என்றார். மேலும் புதிதாக அமல்படுத்தியுள்ள விதிமுறைகளை பற்றி கேட்டபோது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாத போது அவ்வேலைகளை செய்வதற்காக இதுமாதிரியான விதிமுறையை அறிமுகப்படுத்தியதாக கூறினார்.
மேலும் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதன்மூலம் திருச்சி மாவட்ட தென்னூர் சரக மின்வாரியத்தில் ஓர் உயர் பதவியில் உள்ள அதிகாரியின் மீது எழும்பியுள்ள புகாரினால் மின்வாரிய வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பு நிலவி வருகிறது. உதவி செயற்பொறியாளர் திருந்துவாரா? மக்கள் மற்றும் அதிகாரிகளால் திருத்தப்படுவாரா என்று பார்ப்போம்….
ஜெ.கே…
