திருச்சியில் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் முகமூடி அணிந்து போராட்டம்

0
D1

மருத்துவ படிப்பில் ‘நெக்ஸ்ட்’ தேர்வினை புகுத்தக்கூடாது, எம்.சி.ஐ.க்கு பதிலாக என்.எம்.சி. முறையை கொண்டு வரக்கூடாது, புதிய தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

N2

6-வது நாளான நேற்று மாலை மருத்துவ கல்லூரி வளாகத்தில் மாணவ- மாணவிகள் முகத்தில் கேள்விக்குறி சின்னத்துடன் கூடிய முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் கணபதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முத்துப்பாண்டி, புகழரசு, யோகப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள்.

N3

Leave A Reply

Your email address will not be published.