திருச்சியில் பச்சிளங்குழந்தையை பலி ஆடாக்கிய காமக்கொடூரன் போக்ஸோவில் கைது

0
1

திருச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக பெண் குழந்தைகளுக்கான கொடூரங்கள் பெருகி கொண்டே காணப்பட்டு வருகிறது. ஒருபக்கம் பெண் குழந்தையாக பிறந்தால் அவற்றை ஆற்றங்கரையிலோ, கோவில் வாசலிலோ பெற்றோர்களே தூக்கிப்போட்டு விட்டு போய்விடுகின்றனர், மற்றறொருபக்கம் சில காமக்கொடூரன்கள் வலையில் அப்பாவியான குழந்தைகள் சிக்கிக்கொள்கின்றனர். 

திருச்சியில் நடந்த சில பதற வைத்த சம்பவங்கள்;

4

கடந்த ஜூன் 01, 2019 அன்று திருச்சியில் சத்திரம் பகுதியில் 5 வயது சிறுமி நடன வகுப்பு சென்றபோது நடன ஆசிரியர் சரவணக்குமார் (19) ஆபாச படங்களை காட்டி சிறுமி பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

 மேலும் மற்றோரு நிகழ்வாக திருச்சி பீமாநகரை சேர்ந்த முகமது இலியாஸ் (வயது 43). சைக்கிள் கடை உரிமையாளரின் 6 வயது பேத்தியை, ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அழைத்து சென்று பின்னர் சிறுமி பாலியல் பலாத்காரம் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து டிச 09, 2018 அன்று ஸ்ரீரங்கம் அம்பேத்கார்நகரை சேர்ந்த 15 வயது சிறுமிகள் இருவர், கொள்ளிடம் பஞ்சக்கரை ஆற்றுப் பகுதியில் குளிக்க சென்றபோது. அங்கு மது குடித்துக்கொண்டு இருந்த மகேஸ்வரன், பாலகிருஷ்ணன் ஆகிய  4 பேர்கொண்ட கும்பல் சிறுமிகளிடம் தகராறு செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒரு சிறுமி கயவர்களிடம் இருந்து தப்பினார், மற்றொரு சிறுமியை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.  

2

மேலும் கடந்த ஜனவரி 12ம் தேதி திருச்சியில் இருந்து 4வயது சிறுமியை கடத்திய ஒரு பிச்சைக்கார கும்பல்.  போதையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் மூச்சுத்திணறி சிறுமி உயிரிழந்துள்ளார். அதனை மறைக்க அக்கும்பல் சிறுமியின் உடலை பாலக்காடு ரயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில் வீசிவிட்டுச்சென்றது. இவ்வழக்கில் போலீசார் வலையில் சுரேஷ் எனும் பிச்சைக்கார கும்பலை சேர்ந்த ஒருவன் போலீசில் சிக்கிக்கொண்டான். இதில் சுரேஷ் மீது காவல்நிலையத்தில் வேறு ஒரு வழக்கு உள்ளதும் தெரியவந்தது…..

இதுப்போன்ற தொடர் சம்பவங்கள் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது திருச்சியில் மீண்டும் மனதை பதறவைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கடந்த 29/07/19 அன்று முசிறி அருகே நாச்சம்பட்டி பகுதிகளில் உள்ள கிராமங்களில் மழை வேண்டி கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் நாடகம் நடைபெற்று வருகிறது. இந்த நாடக நிகழ்ச்சியை காண அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 7- வயது மகளை வீட்டில் தூங்க வைத்து விட்டு நாடகம் பார்க்க சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை அழுது கொண்டே தாயிடம் வந்துள்ளது. பதறிப்போன தாய் தன் மகளைப் பார்த்ததும், குழந்தையின் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் காலை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை சேர்த்துள்ளார். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். உடனே குழந்தையின் தாய் கண்ணீர் விட்டு மருத்துவமனையிலேயே  கதறி அழுதுள்ளார். மருத்துவர்கள் முசிறி காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த நடந்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி தமிழ்மாறன் தலைமையில் காவல் ஆய்வாளர் பால்ராஜ் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையின் அடிப்படையில் அதில் நாச்சம்பட்டி கிராமத்தில் உள்ள வாலிபர் தனபால் (23) என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், தனபால் தான் போதையில் செய்ததாக தெரியவந்து வாக்கு மூலம் அளித்துள்ளார். அவர் மீது முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் முசிறியில் தொடர்ந்து குற்றச் செயல்கள் ஈடுப்பட்ட வந்த குற்றவாளிகளை, தேடி பிடித்த காவலர்கள் அனைவரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

திருச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான கொடுமைகள் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டுக்கொண்டே இருக்கின்றது. இதனை எவ்வாறு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் எவ்வாறு சரிக்கட்டப் போகிறது என்பது தெரியவில்லை…… 

ஜெ.கே…

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்