திருச்சி பெண் எஸ்.ஐ -க்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த டி.எஸ்.பி சஸ்பெண்ட்

0
Full Page

திருச்சி பெண் எஸ்.ஐ -க்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த டி.எஸ்.பி சஸ்பெண்ட்…..பணி ஓய்வு நாளன்று அதிரடி…..

திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக 2015ல் பணியாற்றியவர் வெங்கட்ராமன். இவர் பணியில் இருந்தபோது போன் மூலம் அடிக்கடி ‘செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்து வந்ததாக
பெண் எஸ்.ஐ ஒருவர் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதன்பேரில் அவர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக 2015ல்பணியாற்றியவர் வெங்கட்ராமன். அவர் பணியில் இருந்தபோது போன் மூலம் அடிக்கடி பெண் எஸ்.ஐ அழகம்மாளுக்கு ‘செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பல மாதங்களாக தொடர்ந்த இந்த தொந்தரவை பொறுமையாக சமாளித்து வந்துள்ளார் அந்த பெண் எஸ்.ஐ. கடைசியில் நிலைமை மோசமாகவே தனது கணவரிடம் கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் சப்–இன்ஸ்பெக்டரின் கணவர் வழக்கறிஞர் முத்துகுமார் காவல்துறையிலேயே பெண்களுக்கு களங்கமா? என துடித்தார். இது குறித்து அன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரான சஞ்சய் மாத்தூரிடம் புகார் செய்தார்.

பெண் சப்–இன்ஸ்பெக்டரின் கணவர் புகார் கொடுக்க வரும் தகவல் அறிந்து ஏராளமான பத்திரிகையாளர்கள், டி.வி., கேமராமேன்கள் சுப்பிரமணியபுரத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.

ஆனால் பெண் சப்–இன்ஸ்பெக்டரின் கணவர் வரவில்லை. அவர் மதியத்திற்கு மேல் புகார் கொடுக்க வருவதாக கூறப்பட்டது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் சப்–இன்ஸ்பெக்டர் விடுப்பில் சென்றுவிட்டார்.

Half page

பெண் சப்–இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரி தன்னிடம் செல்போனில் ஆபாசமாக பேசியது முழுவதையும் அவருக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளார். அதனை சி.டி.யாக தயாரித்து புகார் மனுவுடன் போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் அளிக்க இருந்தார்.

சமீபத்தில் திருச்சி மாநகர போலீசில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் சிறந்த பணிக்கான பாராட்டு விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பெயர், படங்களுடன் ப்ளக்ஸ் பேனர் காவல்நிலையங்கள் முன்பு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2015 வருடம் நவம்பர் மாதம் சிறப்பாக பணியாற்றிய போலீசார் பட்டியலில் தற்போது புகாருக்கு உள்ளான உதவி ஆணையரும், பாதிக்கப்பட்ட பெண் சப்–இன்ஸ்பெக்டரும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது புகார் கொடுக்க முன்வந்துள்ள பெண் சப்–இன்ஸ்பெக்டர் தவிர, மேலும் 3 பெண் சப்–இன்ஸ்பெக்டர்கள் இதே போன்று உயர் அதிகாரியின் டார்ச்சரால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் எல்லோரும் தங்களின் வேலை நேரத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் யுகங்களை போல செலவிட்டுயிருக்கிறார்கள். இவரின் செல்வாக்கையே சில பெண் காவலர்கள் பெரிய ஆயுதமாக பயன்படுத்திய கதையும் இருக்கிறது என்கிறார்கள். சிலர் தங்களுக்கு ஏற்பட்ட இந்த கதியை நினைத்து கதறிக்கு கொண்டுயிருந்த நேரத்தில் தான்….

பூனைக்கு யார் மணிகட்டுவது என்று பலர் யோசித்து கொண்டிருந்த நிலையில், அழகம்மாள் பெண் சப்–இன்ஸ்பெக்டரின் கணவர் துணிந்து புகார் கொடுத்தார்.

பின்னர் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் சென்னையில் காவல்துறை உயர் அதிகாரி திரிபாதி அவர்களை சந்தித்து ஏசி வெங்கட்ராமனை இடமாற்றம் செய்தது தவறு அவரை சஸ்பெண்ட செய்ய வேண்டும் என்று அவருக்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தனர்.

அதன்மூலம் பெண் எஸ்ஐக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நிலையில் இவர் நாகர்கோவிலுக்கு மாற்றப்பட்டார். அங்கும் இவர் செக்ஸ் டார்ச்சர் விவகாரத்தில் சிக்கினார். பின்னர் பழனிக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு 2 வருடம் பணிபுரிந்தார். பின்னர் நாகை நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு பணியாற்றி வந்தார். 31-07-19 இன்று ஓய்வுபெற இருந்த நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்காக நகல்கள் திருச்சி மாநகர கமிஷனர், நாகை எஸ்பி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சியில் பணியாற்றிய உதவி ஆணையர் ஒருவர் பெண் எஸ்.ஐக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த விவகாரம் காவல்துறையில் கண்ணியமிக்க அதிகாரிகளுக்கு அவலநிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.கே…

Quarter page

Leave A Reply

Your email address will not be published.