திருச்சி தூய வளனார் கல்லூரியில் “தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019”

0

திருச்சி தூய வளனார் கல்லூரியில் “தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019” என்ற தலைப்பில் ஜீலை 25,2019, காலை 9.30 மணி முதல் 2.00 மணி வரை கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், அதிபர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட ஆய்வரங்கம் நடைபெற்றது. தேசிய இதழியல் கல்லூரியின் பேராசிரியரும் சமூக ஆர்வலருமான ஆத்ரேயா ஆய்வரங்கின் தொடக்கத்தில் கருத்துரையாற்றினார். அவர் பேசுகையில் புதிய கல்விக்கொள்கை முற்றிலும் வணிக நோக்கில் பெருநிறுவனங்களுக்குச் சாதகமான வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. ஏழை எளியோர், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் வெகுவாகப் பாதிக்கப்படும் வகையில் உள்ளது. மேலும் மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பாதிக்கின்ற வகையில் உள்ளது. ஆசரியர்களின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. கிராமப்புறக்கல்வி நிறுவனங்களை மூடி ஒருங்கிணைந்த கல்வி வளாகங்களை உருவாக்குவதன் மூலம் கிராமப்புற ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாகிறது. ஆகவே புதிய கல்விக்கொள்கையை அரசு திரும்பப்பெற வேண்டும் என்றார்.

பிறகு நடந்த கலந்தாய்வில் பேசிய முன்னாள் துணை வேந்தரும் பள்ளி கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான வசந்தி தேவி பேசுகையில் புதிய கல்விக்கொள்கை மேல்தட்டு வர்க்கத்தினருக்குச் சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆரம்பக்கல்வியைச் சீர்குலைப்பதாகவும் உள்ளதாகக் கூறினார். சமூக செயல்பாட்டாளர் திருமிகு மார்க்ஸ் அவர்கள் பேசுகையில் புதியகல்விக் கொள்கை, அம்பானி பிர்லா கமிசனின் 90மூ சாரங்களை உள்ளடக்கியதாக உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுபோன்ற தன்னாட்சி நிறுவனங்கள் சிதைக்கப்படும். புதிய கல்விக்கொள்கையில் இடஒதுக்கீடு குறித்த சரத்துக்கள் இல்லை எனவும் மேலும் கல்வி கற்கும் குழந்தைகளிடையே பிரிவினை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளதாகக் கூறினார்.

food

ஆய்வரங்கின் இறுதியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. புதிய கல்விக்கொள்கை நடைமுறையில் உள்ள கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளது. நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கையை மறுகட்டமைப்புச்செய்வதன் மூலம் நம் தேசத்தின் கல்வி முறையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த தேசிய ஆய்வரங்கு புதிய கல்விக்கொள்கையை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கிறது.
  2. புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஒரு குடையின் கீழ் கல்வி நிறுவனங்கள் இணைக்கபடுவதால், ஏழைக் குழந்தைகள் தரமான கல்வி கற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது அல்லது கல்வி எட்டாக்கனியாகிறது ஆகவே சமூக சமநிலை பாதிக்கப்படுவதால், கல்வி நிறுவனங்களை மூடும் முடிவை கைவிட வலியுறுத்துகிறது இந்த ஆய்வரங்கு
  3. புதிய கல்விக்கொள்கை தேசத்தின் சொத்தான கல்வியை முழுவதும் தனியார் மயமாக்கி கல்வியை சர்வதேச சந்தையின் ஆக்கிரமிப்பின் கீழ் வர வழிவகுக்கின்றது. இதன் மூலம் ஏழை பணக்காரர்களுக்கான இடைவெளி அதிகரிக்கின்றது, ஆக அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற அனைவருக்குமான கல்விஉரிமை மறுக்கப்பட வாய்பிருப்பதால் இந்த ஆய்வரங்கு புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வலியுறுத்துகிறது.
  4. புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், கல்வி அமைப்பில் மிகப்பெரிய மாறுதல் உண்டாக்கப்பட்டு அது நடைமுறையில் உள்ள பல்வேறு அமைப்புகளை வெகுவாக பாதிக்கின்றது. அதிலும் குறிப்பாக மாநிலங்களின் கல்வி உரிமை பாதிப்புக்குள்ளாகிறது. ஆகவே, மாநிலங்களின் உரிமையையும் கல்வி அமைப்புகளின் அதிகாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
  5. புதிய கல்விக்கொள்கையில் பொருளாதாரத்தில் விளிம்புநிலையில் உள்ளோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோத்தாரி கமிசன் பரிந்துரைத்துள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்
  6. புதிய கல்விக் கொள்கையின் வரைவு முற்றிலும் திரும்பப் பெறப்பட்டு, ஜனநாயகத்திற்குட்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உறுதி செய்கின்ற வகையில் அனைத்துத் தரப்பு கல்வியாளர்களை உள்ளடக்கிய புதிய குழுவை அமைத்து புதிய வரைவினை உருவாக்க வேண்டும்.

தூயவளனார் கல்லூரியின் அதிபர் முனைவர். லியோனார்டு வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் செயலர் பீட்டர் வாழ்த்திப் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் ஆய்வரங்கின் நோக்கும் போக்கும் குறித்துப் விளக்கினார். இறுதியில் அருட்பணியாளர் வில்சன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் பேராசிரியர் பெர்க்மான்ஸ், முனைவர் ஜான், முனைவர் ஜான் பாலையா ஆகியோர் தலைமையிலான பேராசிரியர்கள் செய்திருந்தனர்

gif 4

Leave A Reply

Your email address will not be published.