திருச்சி சேவா சங்கத்தின் 55வது விளையாட்டு விழா

0

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 55வது விளையாட்டு விழா கடந்த 27ம் தேதி நடந்தது. திருச்சி மாநகர மருத்துவர் டாக்டர். மீனாட்சி சுந்தரம், திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு மற்றும் சேவா சங்கத்தின் தலைவி கமலாபண்டாரி, செயலர் சரஸ்வதி, இணைச்செயலர் சகுந்தலா சீனிவாசன், பொருளாளர் லெட்சுமி சுப்ரமணியன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்; மற்றும் நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

food

தலைமையாசிரியை நாகம்மை அனைவரையும் வரவேற்க மாவட்ட கல்வி அலுவலர் வாழ்த்துரை வழங்கி, கொடியேற்றி அணிவகுப்பை கண்டு களித்தார். வகுப்பு வாரியாக மாணவிகளின் விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகள் பல்:வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை தட்டிச்; சென்றனர். இறுதியாக ஊதா அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜெயக்குமார் முதுகலைப் பட்டதாரி உதவித்தலைமையாசிரியர் நன்றி கூறினார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.