திருச்சி ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தின் சார்பில் 25வது மகாசபை மாநாடு நடைபெற்றது.

0

திருச்சி மாவட்டம் சேருகுடியில் ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கத்தின் சார்பில் 25வது மகாசபை மாநாடு நடைபெற்றது.  மாநாட்டிற்கு சங்க தலைவர் தனபால் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்புரத்தினம் கடந்த ஆண்டு செய்வித்த சாதனைகளை பட்டியலிட்டார். பொருளாளர் தங்கராஜ் மூன்ற ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார். வரும் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

ஆறுநாட்டு தலைமை சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரமேஷ், உபதலைவர் சதீஷ், பொருளாளர் சரவணகுமார் ஆகியோரல் கவுரவிக்கப்படுகின்றனர். அருகில் மணியம்பட்டி சுப்பைய்யா, தங்கராசு, சுப்புரத்தினம், பாலன், வழக்கறிஞர் புஷ்பராஜ் ஆகியோர் உள்ளனர்.
food

வரும் மூன்று ஆண்டுகளுக்கான தலைமை சங்கத்திற்கு ஓமாந்தூர் ரவிச்சந்திரன் தலைவராகவும், செயலாளராக ரமேஷ், பொருளாளராக சரவணகுமார், உபதலைவராக சதீஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய திருமண மண்டபம் கட்டுவது மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தி கொடுப்பது, கஸமூர்த்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம் செய்வது, இளைஞர், பெண்கள் மாநாடு நடத்துவது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டது.

மணியம்பட்டி சுப்பைய்யா, சேருகுடி தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலன் நன்றி கூறினார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.