திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு தன்சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
1

பள்ளி மாணவிகளுக்கு தன்சுகாதாரம் மற்றும் மாதவிடாய் சுகாதார மேலாண்மைபற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி:

பிஷப் ஹீபர் கல்லூரியின்  சமூகப்  பணித்துறை மற்றும் சேவை சைல்டுலைன் – 1098  இணைந்து தன்சுகாதாரம் மற்றும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியினை திருச்சிராப்பள்ளியில் உள்ள பிஷப் ஹீயூமன் நினைவு உயர்நிலை பள்ளியில் கடந்த ஜூலை 25 ஆம்நாள் வியாழக்கிழமையன்று நடத்தினர். இந்நிகழ்ச்சியில் தலைமைவுரையாற்ற அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.ஜோஸ்வா ஜெயகுமார் அவர்களும், கருத்துரையாளராக Indian Institute for human settlements (IIHS) நிறுவனத்தின் ஆலோசகரான அமலா  வாழ்த்துரை வழங்க சேவை சைல்டு லைன்-1098  திட்டஒருங்கிணைப்பாளராக முரளிகுமார் , அலுவலர் வண்ணமதி கலந்துக்கொண்டனர்.

dav
2

இந்நிகழ்ச்சியானது இரண்டுபிரிவுகளாக நடைபெற்றது. முதல்பிரிவில் அப்பள்ளியில்  உள்ள மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் அவர்கள் மேற்கொள்ளும்  செயல்கள் பற்றி அவர்களைக் கொண்டு பயிற்சியும்,  நாடகமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் அமலா பேசியதாவது:

மாதவிடாய் காலங்களில் நம் உடலில் தொற்று நோய் வராமல் பாதுகாப்பது பற்றியும், பருவமடையும் நிலைகள், நாப்கின் பயன்படுத்தும் முறைகள் பற்றியும், நாப்கின் அல்லாத பிற பொருட்கள் பற்றியும் மாதிரிகளை கொண்டு விவரித்தார். பின்னர், மாதவிடாய் காலங்களில் பின்பற்ற கூடிய தவறான பழக்க வழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.மாதவிடாய் காலங்களில் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் பற்றியும், அச்சமயங்களில் மேற்கொள்ள கூடிய சுகாதார மேலாண்மை பற்றியும் விவரித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிஷப் ஹீயூமன் நினைவு உயர்நிலைபள்ளியில் சார்ந்த 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள 55 பள்ளி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விழிப்புணர்வு உரையையும் தங்களின் சந்தேகங்களையும் கேட்டறிந்து பயன்பெற்றனர்.

கல்லூரியின் சமூகப் பணித்துறையின் உதவி பேராசிரியர் முனைவர். .பா.அருண்குமார் வழிகாட்டுதலுடன் இரண்டாம் ஆண்டு மாணவி சிவசண்முகி இந்நிகழ்ச்சியை நடத்தினர்.

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.