திருச்சியில் கிசான்மேளா

0
D1

 திருச்சிராப்பள்ளி மாவட்டம், மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் வேளாண்மைத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கிசான்மேளாமக்காசோளத்தில் படைப்புழு  தாக்குதல் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுடனான கருத்தரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று (30.07.2019) தொடங்கி வைத்தார்கள்.

மக்காச் சோளப் பயிரைத்தாக்கும் புதிய வகைப் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரைகள் என்ற கையேட்டை மக்காச்சோளம் பயிர் செய்யும் விவசாயிகளிடம் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :

நமது மாவட்டத்தில் சராசரி மழை அளவு குறைந்து வருகிறது. தற்பொழுது மக்காச்சோளப் பயிர்களில் புதிய வகை அமெரிக்கன் படைப்புழுக்கள் உற்பத்தியாகி மக்காச்சோளத்தின் மகசூல் விளைச்சலை  பாதிக்கிறது.   மக்காச்சோளப் பயிர் 105 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை உள்ள பயிராகும்இப்பயிரில் 3 முறை பூச்சிகள் தாக்கும்.   ஒரு பூச்சி 2000ம் முட்டைகள் இடும். மானிய விலையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு இடுப்பொருட்கள் வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறதுதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பரிந்துரைகளை முழுமையாகக் கடைப்பிடித்து இந்த ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மக்காச்சோளம் படைப்புழு இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு வேளாண்மைத் துறையினர் பரிந்துரை செய்யும் நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

D2

                மக்காச்சோளத்தினைத் தாக்கும் படைப்புழு கட்டுப்படுத்துவது குறித்த ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறதுஇந்தப் பயிற்சியில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி நடைபெறும் 9 வட்டாரங்களைச் சேர்ந்த 250 விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

                திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மக்காசோளப் பயிர் ஆண்டுதோறும் சராசரியாக 12000 எக்டரில் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்பட்டு வரும் ஒரே வணிக பயிராகும். வணிக பயிர் என குறிப்பிட காரணம் பெய்யும் மழையை கொண்டு எவ்வித பயிர் பாதுகாப்பு செலவினம் இன்றி ஏக்கருக்கு 30 மூட்டை அதாவது 3000 கிலோ வரை மகசூலை இம்மாவட்ட விவசாயிகள் பெற்று வந்தனர். ஆனால் சென்ற ஆண்டு  படைப்புழுவின் தாக்குதலால் மக்காசோளப் பயிர் சாகுபடியின் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

இந்தியாவில் முதன் முதலில் கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் மக்காசோள பயிரில் படைப்புழு தாக்குதல் கண்டறியப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இப்புழு முதன் முதலில் உப்பிலியபுரம் வட்டாரம், சுக்கலாம்பட்டி கோம்பை கிராமத்தில் இறவை மக்காசோளப்பயிரில் கடந்த ஆகஸ்ட் 2018-ல் கண்டறியப்பட்டது.

சென்ற ஆண்டு நமது மாவட்டத்தில் 15745 எக்டரில் மக்காசோள பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இதில் 12100 எக்டர் மக்காசோள பயிர்  படைப்புழுவின் தாக்குதலால் சேதம் அடைந்தது. இதனை கருத்தில் கொண்ட நமது தமிழக அரசு, படைப்புழுவின் தாக்குதலால்; பாதிப்படைந்த மக்காசோள விவசாயிகளை காக்கும் பொருட்டு எக்டருக்கு ரூ.7410 வீதம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது. நமது மாவட்டத்திற்கு 16182 விவசாயிகளுக்கு ரூ.8.96 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு பருவத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளுக்கு ஏற்படுத்த திட்டமிட்டு இன்று இந்த விழிப்புணர்வு ஒரு  நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பூச்சி மக்காசோளம் மட்டுமன்றி  நெல், சோளம், சிறுதானிய பயிர்கள், கரும்பு, காய்கறி பயிர்கள், பருத்தி போன்ற 80 வகையான பயிர்களையும் தாக்கும் திறனுடையது. வளர்ந்த தாய் அந்து பூச்சிகள் ஒரு இரவில் அதிகபட்சமாக 100 கி.மீ முதல் 480 கி.மீ வரை பறந்து செல்லும் திறன் கொண்டதாக உள்ளதுபடைப்புழு நாடுகளை கடந்து, தொடர்ந்து பரவக்கூடிய உயிரியல் அமைப்பினை கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

N2

வளர்ந்த தாய் அந்துப்பூச்சி தனது வாழ்க்கை சுழற்சியில் சராசரியாக 1500 முதல் 2000 முட்டைகளை இடுகிறதுபடைப்புழுவின் வாழ்க்கை சுழற்சி 26 முதல் 37 நாட்களை உடையதால், ஒரு பருவ மக்காச்சோள சாகுபடியின் போதே (105 நாட்கள்) குறைந்த பட்சம் 3 வாழ்க்கை சுழற்சியை முடித்துவிடுவதால், இதன் தாக்குதல் மற்றும் பரவல் மிக அதிகமாக நடக்க வாய்ப்பு உள்ளது.

எனவே மக்காசோள பயிரை சென்ற ஆண்டு தாக்கி பெரும் சேதத்தினை விளைவித்துள்ள  படைப்புழுவினை  வருகின்ற பயிர் சாகுபடியின் பொழுது திறம்பட கட்டுப்படுத்தி நமது மாவட்ட மக்காசோள விவசாயிகளை காக்க வேணடும் என்ற நோக்கில் விவசாயிகளுக்கான பயிற்சி தற்பொழுது நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள விவசாயிகள் அனைவரும் வேளாண் பல்கலைகழக விஞ்ஞானிகள்  கூறும்  படைப்புழு கட்டுபடுத்துவது குறித்த  தொழில்நுட்ப கருத்துக்களை தெரிந்து கொண்டு தங்களது வயலில் கடைபிடித்து நிறைவான மகசூலை பெற வேண்டும்.

மக்காச்சோள படைப்புழு கட்டுப்பாட்டிற்காக வேளாண்மைத்துறையின் மூலம் மெட்டாரைசியம், பவேரியா போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், இனக்கவர்ச்சி பொறிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இப்புழுவின் தாக்கத்தை குறைப்பதற்காக கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.500 /பின்னேற்பு மானியம் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இப்பயிற்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம், வாகரை, திண்டுக்கல் மாவட்டம், உதவி பேராசிரியர் அறிவுடை நம்பி கலந்துகொண்டு கோடை உழவு, விதை நேர்த்தி முறைகளின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்குமுளூர் வேளாண்மைக் கல்வி நிறுவனம் பூச்சியியல் துறை பேராசிரியர் பாஸ்கரன், படைப்புழுவின் முட்டை பருவம், புழு பருவம் மற்றும் கூட்டுப்புழு பருவம் குறித்து, மக்காச்சோள பயிர்களை தாக்கி சேதப்படுத்தும் முறைகளை காணொளி காட்சி மூலம் எடுத்து கூறினார்அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் ~pபா ஜாய்ஸ் ரோஸ்லின் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்திட ஒவ்வொரு பத்து வரிசைக்கும் இடையே 75 செ.மீ இடைவெளி விட்டு விதைப்பு செய்ய வேண்டும் எனவும், பயிர் இடைவெளி சரியான முறையில் இறவைக்கு 60x25 செ.மீ, மானாவாரிக்கு 45x20 செ.மீ என்ற முறையில் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

குமு@ர் வேளாண் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் வள்ளல் கண்ணன் கலந்து கொண்டு, பயிர் வளர்ப்பு அணுகு முறைகளான, வரப்பு பயிராக தட்டைப்பயிறு, சூரியகாந்தி, எள் மற்றும் செண்டு மல்லி பயிர்களையும், ஊடு பயிர்களாக பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்வதால் படைப்புழு மக்காச்சோள பயிரை தாக்குவது கட்டுப்படுத்தப்படும் என எடுத்து கூறினார். வேளாண் அறிவியல் நிலையம் சிறுகமணி திட்ட ஒருங்கிணைப்பாளர் நூர்ஜஹான் படைப்புழுவின் முட்டைப் பருவத்திலேயே டிரைக்கோகிரம்மா பிரிட்டியோசம் என்ற ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 6 சிசி என்ற அளவில் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்படைப்புழு ஆண் அந்துப் பூச்சிகளை ஏக்கருக்கு 20 என்ற அளவில் இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து கவர்ந்து அழிக்கலாம் எனவும் தெரிவித்தார்மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் தொழில்நுட்ப அலுவலர் அய்யம் பெருமாள் மக்காச்சோளப் பயிர்களில் விவசாயிகள் தொடர் கண்காணிப்பு மூலமே புழு தாக்குதலை கண்டறிய முடியும் என்பதையும், செயற்கை பூச்சிக் கொல்லிகள் அஸாடிராக்டின், எமாமெக்டின் பென்சோவேட், நவலூரான் பயன்படுத்தும் வழிமுறைகளையும் எடுத்துக் கூறினார்.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மூலமாக நடைபெற்ற இப்பயிற்சியில் வேளாண்மைத் துறையின் மூலமாக அமைக்கப்பட்ட கருத்து காட்சியில் படைப்புழுவின் பல்வேறு வளர்ச்சி நிலைகள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளுக்கான இடுபொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.

வேளாண்மை துணை இயக்குநர் ராஜேஸ்வரன் கருத்துக்காட்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறி, வந்திருந்த விவசாயிகள் அனைவரும் விழிப்புணர்வு முகாமில் தெரிந்துகொண்ட தொழில் நுட்பங்களை, மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துக் கூறி ஒருங்கிணைந்து செயல்பட்டால் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கூறினார்.

விழிப்புணர்வு கருத்தரங்கில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சந்தானகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி சாந்தி, துணை இயக்குநர் செல்வம், வேளாண்மை உதவி இயக்குநர் விநாயகமூர்த்தி மற்றும் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.