இன்று உலகப் புலி நாள்

0
1

இன்று உலகப் புலி நாள் என்பது புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படுகிறது.

2010ல் ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் 13 நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாடு நடந்தது. இதில், புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புலிகள் இனத்தை பாதுகாக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 29ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாட தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.

4

நம் நாட்டின் தேசிய விலங்கு புலி என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 657 புலிகள் இறந்துள்ளதாக தேசிய புலிகள் ஆணையத்தின் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.  இதில், 138 புலிகள் வேட்டையாடப்பட்டது, சாலை விபத்து உள்ளிட்ட காரணங்களினால் 206 புலிகளும் இறந்துள்ளது.

2

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 1,411ஆக இருந்தது. புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்து, கடந்த  இந்தியாவில் புலி இனத்தை பாதுகாக்க தமிழ்நாடு, உத்திரபிரசேதம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 50 புலிகள் சரணாலயம் உள்ளது.    தேசிய புலிகள் ஆணையம் சார்பில் 4 வருடங்களுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அதன்படி, கடந்த 2006ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பில் 1,411 புலிகள்,  2010ம் கணக்கெடுப்பில், 1,706 புலி, 2014ல் 2,226 புலிகள் இருப்பது தெரியவந்தது. மேலும், கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பு குறித்த தகவல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் நடவடிக்கையால் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், புலிகள் வேட்டையாடுதல், சாலை விபத்து, நோய் உள்ளிட்ட பல்வேறு காரணமாக இறப்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி, கடந்த 2012 முதல் 2018 வரையிலான 7 ஆண்டில் மொத்தம் 657 புலி இறந்துள்ளது.

இதில், 313 புலி இயற்கையாகவும், வேட்டையாடுதல் காரணமாக 138 புலி, விபத்து, இனப்பெருக்க சண்டை உள்ளிட்ட காரணங்களினால் 35 புலி, கண்காணிப்பு கீழ் உள்ள பகுதிகளில் 87 புலிகள் என மொத்தம் 657 புலி இறந்துள்ளது.

இதில், அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில்  30, கர்நாடகாவில் 24, மகாராஷ்டிரா மற்றும் அசாம் மாநிலத்தில் தலா 18 , தமிழகத்தில் 10 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளது. இதுகுறித்து வனஆர்வலர் சிராஜ்தீன் கூறியதாவது:

ஒரு காலத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. தற்போது, வனம் மற்றும் வனவிலங்குகளின் வழித்தடம் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால், அவற்றின் பழக்க வழக்கம் மாறுப்பட்டுள்ளது.  உணவுக்காக மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு வரும் நிலை இருக்கிறது. அப்போது, சமூகவிரோதிகள் சிலர் உணவில் விஷம் வைத்து கொல்கின்றனர். சமீபகாலமாக வேட்டையாடி கொல்வதை விட சாலை விபத்தினால் அதிகளவில் புலிகள் பலியாகிறது.

இதற்கு முக்கிய காரணம் புலியின் வாழ்விடம் சுருங்கிவிட்டுள்ளது. காட்டை விட்டு வெளியேறும் போது இறப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல், அனைத்து பகுதிகளில் உள்ள வனஆக்கிரமிப்பு கட்டிடம், விடுதிகள், அனுமதிபெறாத வீடுகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்கு குறித்த புரிதல் பொதுமக்களிடம் குறைவாக உள்ளது. எனவே, மக்களிடம் புலிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்