ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தங்க நாணயம் பரிசு !

0
1

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா

வெற்றி பெற்றவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது

 இளைய சமுதாயத்தினரிடம் ஓவியக் கலையை வளர்க்கும் விதமாக  டிசைன் ஓவியப்பள்ளி பாரதியின் என்ன தூரிகையின் வண்ணத் துளிகள் தலைப்பில் மூன்று நாள் ஓவிய கண்காட்சியும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இரண்டு நாள் ஓவியப் போட்டியினையும் திருச்சியில் நடத்தியது

2

 

கண்காட்சியில் 40 மாணவர்கள் பங்கேற்று ஒவ்வொரு மாணவர்களும் 4 ஓவியம் வீதம் 160 ஓவியங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள் .அதில் ஒரு ஓவியம் பாரதியினை கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டிருந்தது.

 

நான்கு பிரிவாக நடைபெற்ற ஓவியப்போட்டியில்

 

 எல்கேஜி ,யுகேஜி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற வண்ணம் தீட்டுதல் போட்டியில் ஆர் எஸ் கே பிரைமரி பள்ளி ஹிட்டாசி மடாலா முதலிடமும், ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளி மாணவர் சர்வேஷ் இரண்டாம் இடமும் செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் துவக்கப்பள்ளி மகியாழினி மூன்றாமிடமும் பெற்றார்

 

 முதலாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பிடித்த சாக்லேட் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டடும் போட்டியில் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி ஹர்ஷிகா முதலிடமும், காமகோடி வித்யாலயா பள்ளி முகேஷ் இரண்டாம் இடமும் அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளி ஹாஷினி ஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர்.

 

நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை எதிர்காலத்தில் நீர் தேவை குறித்து ஓவியம் வரைந்து வண்ணம்  தீட்டும் போட்டியில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளி அனுலேகா முதலிடமும் மகாத்மா காந்தி நூற்றாண்டு பள்ளி தனிஷ்கா இரண்டாமிடமும் மெளன்ட் லிட்டாரியா பள்ளி  தமிழ் தாரிகா மூன்றாம் இடமும் பெற்றனர்

 

ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மனித வாழ்க்கையில் தேனீயின் முக்கிய பங்கு குறித்து ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் போட்டியில் செயின்ட் ஜேம்ஸ் பள்ளி டோனி மில்டன் முதலிடமும் வாசவி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி வர்ஷா இரண்டாம் இடமும் செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி ஸ்ரீமதி மூன்றாமிடமும் பெற்றனர்

 

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கவிஞர் நந்தலாலா திரைப்பட கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் பாராட்டுச் சான்றிதழ்களும் தங்க, வெள்ளி நாணய பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார்கள்

 

டிசைன்  ஓவியப்பள்ளி தாளாளர் மதன், இயக்குனர் நஸ்ரத் பேகம் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்கள்

3

Leave A Reply

Your email address will not be published.