மணப்பாறை அருகே பள்ளி மாணவி மர்ம சாவு

0
Business trichy

மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 38). கூலித் தொழிலாளி. இவருடைய மகள் சினேகா(16). இவர் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் செல்வராஜ், குடிபோதையில் அவருடைய மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

MDMK

அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டபோது, செல்வராஜிடம் சினேகா ‘அம்மாவை ஏன் அடிக்கிறீர்கள்’ என்று கேட்ட போது, அவரையும் செல்வராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சினேகா மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அவருடைய உடல் கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சினேகாவின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.