இந்தியா – புதிய கண்டுபிடிப்புகள் 5 இடங்கள் முன்னேற்றம்.!

0
1

சர்வதேச நாடுகளுக்கான புதிய கண்டுபிடிப்புகள் குறியீட்டில் இந்தியா ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.
உலக நாடுகளின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதில் காணும் வெற்றிகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் உலக கண்டுபிடிப்புக் குறியீட்டு அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
கார்னல் பல்கலைக் கழகம், இன்சீட் தொழில் பள்ளி, உலக அறிவுசார் சொத்து அமைப்பு கூட்டாக இணைந்து வெளியிடும் இந்த அறிக்கையின் 2019ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியா 52ஆவது இடத்தில் இருக்கிறது.

சென்ற ஆண்டை விட ஐந்து இடங்கள் இந்தியா ஏற்றம் கண்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிறுவனங்கள், மனிதவள மூலதனம் & ஆராய்ச்சி, உள்கட்டுமானச் சந்தை நுட்பங்கள், தொழில் சார் நுட்பங்கள், அறிவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி ஆகிய அம்சங்களில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே புதிய கண்டுபிடிப்புகளுக்கான சர்வதேசப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. 2015ஆம் ஆண்டில் 81ஆவது இடத்திலிருந்து 2016ஆம் ஆண்டில் 66ஆவது இடத்துக்கும், 2017ஆம் ஆண்டில் 60ஆவது இடத்துக்கும், 2018ஆம் ஆண்டில் 57ஆவது இடத்துக்கும் இந்தியா முன்னேறியிருந்தது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 2011ஆம் ஆண்டு முதலே இப்பிரிவில் இந்தியா முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும், உலகின் தலைசிறந்த 100 அறிவியல் & தொழில்நுட்ப நகரங்களில் இந்தியாவின் பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

2

சர்வதேச நாடுகளுக்கான புதிய கண்டுபிடிப்புகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
ஸ்வீடன், அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, பின்லாந்து, டென்மார்க், சிங்கப்பூர், ஜெர்மனி, இஸ்ரேல் ஆகிய நாடுகள் சுவிட்சர்லாந்தைத் தொடர்ந்து முதல் பத்து இடங்களுக்குள் இருக்கின்றன.
டெல்லியில் ஜூலை 25 நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான பியூஷ் கோயல் இந்த சர்வதேச புதிய கண்டுபிடிப்பு குறியீட்டு அறிக்கையை வெளியிட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.