ஒன்று முதல் ஒரு லட்சம் வரை எழுதும் 4 வயது மாணவர்

0
1 full

குழந்தைகளை ஒன்றிலிருந்து பத்து வரையிலான எண்களை எழுத்து வடிவத்தில் எழுத வைப்பதே பெற்றோர்களுக்குச் சிரமமான ஒன்றாக இருக்கும்.
ஆனால், விருதுநகரைச் சேர்ந்த யஷ்வின் என்ற நான்கு வயதுச் சிறுவன், ஒரு லட்சம் வரைக்கும் நீங்கள் சொல்கிற எண்ணைச் சட்டென எழுதி உங்களை ஆச்சர்யப்படுத்துவான்.

ஒன்று முதல் ஒரு லட்சம் வரையிலான எண்களை எழுத்தாலும் எண்ணாலும் எழுதிய இளம் வயதுச் சாதனையாளர் என இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், யஷ்வினின் சாதனையை அங்கீகரித்திருக்கிறது.
இது குறித்து யஷ்வின் “என்னோட ரெண்டு வயசிலிருந்தே நம்பர்களை வேகமாகச் சொல்றதுக்கு எங்க அம்மா டிரையினிங் கொடுத்தாங்க. என்னோட மூணு வயசில் ஒரு லட்சம் வரையிலான நம்பர்களை மனப்பாடமாகச் சொல்லுவேன்.

ஸ்கூலில் மிஸ் கூப்பிட்டுப் பாராட்டுனாங்க. என் ஃப்ரெண்ட்ஸ்லாம் கைதட்டும் போது சந்தோஷமா இருந்துச்சு. அடுத்தகட்டமாக நம்பர்களை ஆங்கிலத்தில் வார்த்தைகளாக எழுத பயிற்சி எடுத்துக்கிட்டேன். தினமும் ஸ்கூல் முடிச்சு வந்து ஒரு மணி நேரம் நம்பர் பிராக்டீஸ் பண்ணுவேன்.
ஒன்றிலிருந்து ஒரு லட்சம் வரை எந்த நம்பரைச் சொன்னாலும்,அடுத்த நிமிஷம் எண் வடிவத்திலும், எழுத்து வடிவத்திலும் எழுதி முடிச்சுருவேன். ஆரம்பத்தில் நிறைய தப்புகள் வரும். நிறைய பிராக்டீஸ் எடுத்து தப்புகளையெல்லாம் குறைத்தேன்.

2 full

கடந்த மாதம் “இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு” என்ற உலக சாதனையைச் சாத்தியமாக்கினேன். இப்போ ஸ்கூல் லீவ் என்பதால் தொடர்ந்து பயிற்சிகள் செய்துட்டு இருக்கேன். இப்போ ஒரு பில்லியன் வரை எழுதக் கத்துகிட்டேன்.கூடிய விரைவில் கின்னஸ் சாதனை படைப்பேன்” என்கிறார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.