மனித கழிவு நீர் நடுவே குழந்தைகள் பெரியவர்கள் ஸ்மார்ட் சிட்டி திருச்சி மாநகராட்சி ????

0
1 full

திருச்சி மாவட்டம் 51வது வார்டு, புத்தூர் ஆட்டு மந்தை தெருவில்  குறைந்த பட்சம் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்களில்  80 சதவிகித மக்கள் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள்… இப்பகுதிக்கான பொதுக்கழிப்பிடம் தெருவின் நுழைவு பகுதியில் உள்ளது…

அக் கழிப்பிடம் முற்றிலும் தரம் இழந்து எந்த நேரத்திலும் இடிந்துவிழக்கூடிய அபாயகரமான மற்றும் மக்களை அச்சுறுத்தும் நிலையில் உள்ளது ..

இது குறித்து திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கும் ஆணையர், உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், வார்டு துப்புரவு மேற்பார்வையாளர் என்று அனைத்து அதிகாரிகளிடமும் இப்பகுதி மக்கள் பல முறை நேரில் சென்று மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

2 full

கடந்த 4மாதங்களுக்கு முன்பு ஆணையர் அப் பகுதியை நேரில் வந்து பார்வையிட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கழிப்பிடத்திற்கான  இடம் போக மீதம் உள்ள இடத்தில் திறந்த வெளி உடற்பயிற்சி பூங்கா அமைத்து தருவதாகவும் உத்தரவாதம் அளித்து விட்டு சென்றார்.. அவருக்கு தங்களின் நன்றியினை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், இன்று  வரை எந்த நடவடிக்கையும் இல்லாததை நினைத்து வருந்துகின்றனர்.

தினம் தினம் அந்த பொது கழிப்பிடத்தில் அடைப்பு ஏற்பட்டு அந்த மனித கழிவு நீர் அருகில் உள்ள வீட்டிற்குள் செல்கின்றது, .ஊர் பச்சிளம் குழந்தைகள், வயதானவர்கள் , நோய்வாய்பட்டவர்கள் என்று பலரும் அந்த கழிவு நீரை கடந்தே பள்ளிக்கும், வேலைக்கும்  செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

இதனால் அப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு,  மக்களின்  உடல் நலமும் சீர்கேடடைகிறது.

வெளிப் பகுதியில் இருந்து வரும் மக்கள் இப்பகுதியை கடக்கும் போது முகம் சுழிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டது. இது அப்பகுதி மக்களின் ஆதங்கம்.

மேலும் அப்பகுதியில் மாநகராட்சி சார்பாக வீடு வீடாக சென்று குப்பை பெற்று செல்ல யாரும் வராத காரணத்தினால்..? வேறு வழியின்றி தெருமுனையிலே குப்பைகளை மலைபோல் குவிந்து உள்ளனர்… இக்குப்பைகளை அன்றாடம் அப்புறப்படுத்துவதும் இல்லை….

வாரத்திற்கு ஒரு முறைதான் லாரி வைத்து அள்ளுகின்றனர்… மீதம் உள்ள 6 நாட்கள் அப் பகுதியின் சுற்றுசூழல் கேள்விகுறியே…???

மேலே குறிப்பிட்ட மக்களின் மிக மிக அத்தியாவசிய, நியாயமான குறைகளை நிவர்த்தி செய்து தாருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்…..

தவறும் பட்சத்தில் அப் பகுதி மக்களை ஒன்று திரட்டி வீதியில் வந்து போராடவும் தயாராக உள்ளதாக அப்பகுதிமக்கள் இதன் வாயிலாக திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றனர்…..

– திருச்சி குமரன்

3 half

Leave A Reply

Your email address will not be published.