திருச்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா

0
Full Page

திருச்சி சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவினை (15.07.19)முன்னிட்டு மருத்துவமனையின் நிர்வாகஇயக்குனர் மருத்துவர் செந்தில்குமார் தலை மையில் மருத்துவக்குழுவினர் எடமலை ப்பட்டியில் உள்ள திருச்சி புனித தோமையர் கருணை இல்லத்தில் மருத் துவ முகாம் ஏற்பாடு செய்து இருந்தனர் .

 

புனித தோமையர் கருணை இல்ல தலைமை அருட்சகோதரி வரவேற்று பேசினார் .நிகழ்வில் சில்வர்லைன் சிறப்பு மருத்துவமனையின்நிர்வாக இயக்குனர் மருத்துவர் செந்தில்குமார் தனது உரையில் ” புற்றுநோயினை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில்முற்றிலும் குணப்படுத்தலாம்.புற்றுநோயின் பாதிப்பில்வயது மிக முக்கிய காரணியாக விளங்கு கின்றது உலகில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 %சதவீதத் திற்கும் அதிகமாக 65க்கும் வயதிற்கு மேற்பட்ட முதியவர்களே ஆகும் .இந்தவயதில் முதியவர்களின் உடலில் ஏதேனும் அசாதாரண மாற்றம் ஏதேனும் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும் புற்றுநோய் ஒரு தொற்று நோய் அல்ல இது யாருக்கும் பரவாது பொதுவாக மக்கள் இது நாம் செய்த பாவத்தினால் வருகிறது ஒருமுறை வந்தால் குணப்படுத்த முடியாது என தவறான எண்ணத்தில் உள்ளனர்.வயதில் முதிர்ந்த பெண்கள் அதிகம் கருப்பை வாய் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர் .
இந்த நோய் HPV எனும் வைரசால் ஏற்படுகிறது உண்மையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டுபிடிக்கவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும், முழுவதுமாகக் குணப்படுத்தவும் சிறந்த கருவிகளும் வழிமுறைகளும் போதுமான அளவில் நம்மிடம் இருக்கின்றன.

 

தொடர்ச்சியாக குறிப்பிட்ட இடைவெளியில் இதனை தவிர்க்க குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்படும் வழக்கமான சோதனை கள் – Screening tests) மூலம் புற்றுநோய் உருவாவதற்கானகூறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கலாம் ,பாப்ஸ்மியர் ( Papsmear ) எனப்படும் தணிக்கை சோதனையின் மூலம் ஆரம்பநிலையிலேயே கண்டறியலாம் உலகளாவிய அளவில், கருப்பை வாய்ப் புற்று நோயானது நான்காவது பெரியளவில் ஏற்படும் புற்றுநோயாகவும், பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் நான்காவது அதிகளவிலான இறப்பை ஏற்படுத்தும் புற்றுநோயாகவும் இருக்கின்றது என உலக சுகாதார அமைப்பு ஒர் அறிக்கையில் கூறியுள்ளது உலககெங்கிலும் பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் நான்காவது இடத்தில் இருக்கிறது கர்ப்பப்பை வாய் புற்றுநோய். ஆண்டுக்கு 5,00,000 பெண்கள் இந்தப் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள்.
அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 10,000-க்கும் மேற்பட்ட பெண்களை இந்தப் புற்றுநோய் தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

 

Half page

அவர்களில் 4,000 பேர் இறக்கிறார்கள் என்றும் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். அதே நேரத்தில், அமெரிக்காவில் கடந்த 40 வருடங்களில் இந்தப் புற்றுநோயால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 50 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. காரணம், இதைக் கண்டுபிடிக்கும் கருவிகளும் வழிமுறைகளும் அதிகமானதுதான்.ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 200 பெண்கள் கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் இறக்கிறார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆக, இந்தப் புற்றுநோய் இந்தியாவில் அவசியம் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக உருவெடுத்திருக்கிறது.
`உலக அளவில் வருடத்துக்கு 2,80,000 பெண்கள் இந்தப் புற்றுநோயால் இறக்கிறார்கள்’ என்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.

 

இவர்களில், 90 சதவிகிதம் பேர் ஏழ்மையான, நடுத்தர நாடுகளைச் சேர்ந்த பெண்கள்.வெள்ளைப்படுதல்தான் இதன் முக்கியமான அறிகுறி. திருமணத்துக்கு முன்பாக ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படும்.
ஆனால், திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் வெள்ளைப்படுதல், கட்டியாகவும், நிறம் மாறியும், துர்நாற்றம் வீசுவதாகவும் இருக்கும். ஸ்கேன் மூலம் கர்ப்பப்பைவாய் புண்களைக் கண்டுபிடிக்க முடியாது.உடலுறவில் ஈடுபடும்போது பெண்களுக்கு ரத்தம் வந்தால், உடனடியாக கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும். ரத்தம் கசிவது மிக மிக முக்கியமான அறிகுறி. சில பெண்களுக்கு ரத்தம் வராமல், உடலுறவின்போது வலி ஏற்படும். அப்படி இருந்தாலும் சோதனை செய்துவிடுவது நல்லது.ஸ்டேஜ் 0 முதல் ஸ்டேஜ் 4 வரை கர்ப்பப்பைவாய் புற்றுநோயில் ஐந்து நிலைகள் இருக்கின்றன.

 

இவை புற்றுநோயின் ஆரம்பநிலையாக இருந்தால், குணப்படுத்திவிடலாம். ஹெச்.பி.வி வைரஸ் பாதிக்காமல் தடுக்க, இப்போது தடுப்பூசிகள் வந்துவிட்டன. அவற்றைப் போட்டுக்கொண்டால் வைரஸ் பரவாமல் தடுக்கலாம். குறிப்பாக, திருமணத்துக்கு முன்னதாகவே, அதாவது பெண்களின் 14-15 வயதிற்குள்ளாகவே (பூப்படைந்து) ஊசி போட்டுக்கொள்வது நல்லது. மொத்தம் மூன்று ஊசிகள், முதல் ஊசி போட்டு, ஒரு மாதம் கழித்து இரண்டாவது ஊசி, பின்னர் ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது எனப் போட்டுக்கொள்ள வேண்டும்.
கர்ப்பப்பையை நீக்காமலேயே புற்றுநோயைக் குணப்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்கினாலே போதுமானது.

லேப்ராஸ்கோபி (Laparoscopy) மூலமாகவே இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். பொதுவாக ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இவர்கள் சிறுநீர் கழிக்கும்போது இரத்தம் கலந்து வந்தாலோ தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டாலோ சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என உரையாற்றினார் .

Quarter page

Leave A Reply

Your email address will not be published.