தீக்குள் விரலை வைத்தால்….

0
Full Page

நெருப்பு தன்னளவில் நல்லதோ தீயதோ இல்லை.

அது நமக்கு இதமான வெகுவெதுப்பு தரும்போது, ஆ எவ்வளவு அருமையான நெருப்பு! என்கிறோம்;
விரலைச் சுட்டுவிட்டால் அதையே குறை கூறுகிறோம்.

எனினும் நெருப்பு தன்னளவில் நல்லதோ கெட்டதோ இல்லை.

அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ற உணர்ச்சியை அது நம்முள் எழுப்புகிறது.

உலகமும் அவ்வாறே. அது பூரணமானது. பூரணமானது என்றால், தன் குறிக்கோளைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கான அனைத்தையும் கொண்டது என்பதே.

நாம் இல்லையென்றாலும் அது அழகாக இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.

Half page
Quarter page

Leave A Reply

Your email address will not be published.