திருச்சியில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா

0
1

துறையூர் நகராட்சி சுகாதாரப் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் 32 பேர் துப்புரவு பணியாளர்கள் பணி செய்கின்றனர். நிலா மகளிர் சுய உதவிக் குழு நியமித்த ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், அந்தக் குழுவின் தலைவி சந்திரகலா ஒப்பந்த பணியாளர்களை வேலையை விட்டு நீக்கிவிடுவேன் என்று மிரட்டுவதைக் கண்டித்தும், சுகாதார மேற்பார்வையாளர் சுதாகர் செயல்பாடு திருப்தியில்லை என்றும் கூறி வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Helios
2

தகவலறிந்து துறையூர் நகராட்சி சுகாதார அலுவலர் மூர்த்தி பணியாளர்களிடம் பேசியதை அடுத்து அவர்கள் தங்கள் பணிக்குசென்றனர்

3

Leave A Reply

Your email address will not be published.