ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படைக்கலன் தொழிற்சாலையில் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். நிகழாண்டில் ஆட்களைத் தேர்வு செய்ய புதிய நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. இந்நிறுவனம், ஏற்கெனவே இருந்த ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு எடுக்காமல் புதிய ஆட்களை தேர்வு செய்து பணியை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய ஒப்பந்த தொழிலாளர்கள் 2 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

கடந்த ஜூலை 5ஆம் தேதி திருவெறும்பூர் வட்டாட்சியர் ரபிக் அகமது தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் சங்கத்தின் பொதுச்செயலர் பெரியசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை  கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ரபீக் அகமது தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் உறுதியளித்தைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
