சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம்

0
1 full

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், வளநாடு பகுதி, வெள்ளையக்கோன்பட்டி கிராமத்தில், சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் 829 பயனாளிகளுக்கு ரூபாய் 85 இலட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நேற்று வழங்கினார்.

நேற்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் 39 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 18 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், 9 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா பெயர் மாற்றம், 38 பயனாளிகளுக்கு சிறு குறு விவசாய சான்று, 192 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா நகல், 66 பயனாளிகளுக்கு கணினி சிட்டா, 87 பயனாளிகளுக்கு உழவர் அட்டை, 25 பயனாளிகளுக்கு வாரிசு சான்று, 54 பயனாளிகளுக்கு இறப்பு சான்று, 4 நபர்களுக்கு பிறப்பு சான்று, 8 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, 2 நபர்களுக்கு இஸ்திரிப்பெட்டி, 10 நபர்களுக்கு முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், 12 நபர்களுக்கு வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு உதவி உபகரணங்கள், 4 நபர்களுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் உதவி உபகரணங்கள், 80 நபர்களுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, 58 நபர்களுக்கு இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை, 7 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, 1 நபருக்கு கணவரால் கைவிடப்பட்டடோர் உதவித்தொகை, 1 நபருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண உதவித்தொகை, 29 நபர்களின் குடும்பத்திற்கு இயற்கை மரணம் உதவித்தொகை, 23 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை, 47 நபர்களுக்கு திருமண உதவித்தொகை, 13 நபர்களுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சேமிப்பு பத்திரம், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா காலிப்பர், காதொலி கருவி என மொத்தம் 829 பயனாளிகளுக்கு ரூபாய் 85 இலட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி தெரிவித்ததாவது:

மருங்காபுரி வட்டம், விவசாயத்தை சார்ந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் மானாவாரி பயிர்கள் பயிர்செய்யப்படுகின்றன. பொதுமக்கள் நீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்து மழைநீரை பூமிக்கடியில் செலுத்தி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 404 கிராம ஊராட்சிகளில் உள்ள 500 ஊரணிகள் மேம்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் 30 சென்ட் நிலத்தில் பண்ணைக் குட்டை அமைக்க போதுமான இடமாகும். பண்ணைக் குட்டை அமைப்பதன் மூலம் மழைநீர் தேங்கி நீலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். குடிநீர் சீராக வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

2 full

பேருந்து வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் வருடம் ரூபாய் 6000 பெறுவதற்கு விண்ணப்பம் அளித்தால் தகுதியின் அடிப்படையில இத்திட்டத்தில் சேர்க்கப்படும். இதுவரை நமது மாவட்டத்தில் முதல் தவணையாக 1,42,000 விவசாயிகளுக்கு தலா ரூபாய் 6000 வீதம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணையாக 90 ஆயிரம் விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை தொடர்ந்து இந்த பகுதிக்கு வழங்கப்படும்.  பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விடுபட்ட விவசாயிகள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.

இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 244 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 218 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று நிறைவு நாள் முகாமில் 123 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு 15 நாட்களுக்குள் மனுமீது எடுக்கப்பட்ட தீர்வுகள் தொடர்பாக மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசுதெரிவித்தார்.

மனுநீதி நிறைவு நாள் முகாமில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுகாதாரத்துறை, ஆகிய துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கும் சிறு புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மனுநீதி நிறைவு நாள் விழாவில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சந்தானகிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் விமலா, சமூக பாதுகாப்புத் தி;ட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சாந்தி(வேளாண்மை), ஜே.பி.எஸ்.மணியன்(சத்துணவு), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர். எஸ்தர்ஷீலா, மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி, தாட்கோ பொதுமேலாளர் தியாகராஜன், மருங்காபுரி வட்டாட்சியர்  சத்யபாமா, வட்டாட்சியர் (சமுக பாதுகாப்புத் திட்டம்) வாசுதேவன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.