திருச்சி திமுக நகர செயலாளர் மு.அன்பழகன் எப்போது ஜெயிக்க வாய்ப்பு !

திருச்சி திமுக நகர செயலாளர் மு.அன்பழகன் எப்போது ஜெயிக்க வாய்ப்பு !
மு. அன்பழகன் (பிறந்த தேதி 12-6-1956)
கம்யூனிஸ்ட்டு கொள்கையில் தீவிர ஈடுபாடுடைய தொழிற்சங்கவாதியுமா என்.முத்துவேல், 1952ஆம் ஆண்டு இராஜாஜி ஆட்சியின் போது இரயில்வே தொழிளாளர்கள் நலன் சார்ந்த போராட்டத்திற்காக ஐந்து வருடம் சிறை தண்டனை பெற்று நான்கரை வருடம் சிறையில் கழித்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவரின் மகன் தான் மு.அன்பழகன். தந்தை செய்த தியாகமும், புண்ணியமும் தான் மு.அன்பழகனை இவ்வளவு உச்சத்தில் இட்டு சென்றுள்ளது.

பிறந்த தேதி (12=1+2=3)(12-6-1956 1+2+6+1+9+5+6 = 30 = 3)
பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் வரும் எண் 30 = 3, எண் 30 முப்பது வயதிற்கு மேல் ஒருவர் வளர்ச்சி அடைவதை குறிக்கும். மு.அன்பழகன் 12ம் தேதி பிறந்ததால் பெற்றோரை பாதிக்கும். இவர் பெற்றோர் எளிமையாக வாழ்ந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். எண் 3ல் எண் 12 சிறுவயதில் கஷ்டப்பட்டாலும் வயது ஏற ஏற உச்ச இடத்திற்கு கொண்டு சேர்க்கும். 12ல் பிறந்த பெரும்பாலானோர் உச்சத்தை அடைந்துள்ளனர். உதாரணம், ரஜினி 12, அபிரகாம்லிங்கன் 12.
எண் 3 இரக்கக்குணம் உண்டு. அதேபோல் அடுத்தவரை விரட்டி வேலை வாங்குவதில் கில்லாடி. இவர்கள் கடுமையாக இருப்பதாக மற்றவர்கள் நினைப்பதற்கு காரணம் எண் 3 தான். தன்னைப் போல் மற்றவர்களும் வேலையை சரியாக செய்ய வேண்டும். இல்லை என்றால், அவர்கள் அந்த வேலையை செய்ய லாயக்கற்றவர் என்ற நினைப்பு வருவதால், இவர்கள் கடுமையாக இருப்பதாக மக்கள் நினைப்பார்கள்.
எண் 3 குருவை குறிக்கும். குரு ஆலோசனை சொல்லும் இடத்திலோ, அல்லது தலைமை பொறுப்பிலோ இருப்பார். குருபலம் பெற்றிருப்பின் வங்கி கணக்காளர்களாகவோ, பணம் புலங்கும் தொழில் செய்பவராவோ இருப்பார்கள்.

திருச்சியில் கே.என்.நேருவுக்கு (K.N.NEHRU 2+5+5+5+5+2+6 = 30 = 3) நிழல் போல் இருப்பவர் மு.அன்பழகன். இருவருக்கும் எண் 3 இருப்பதால், நெருக்கமாக உள்ளனர். எண் 3 தமிழகத்திற்கு எதிர் எண். இந்தியாவிற்கு இராசியான எண். இவர் நாடாளுமன்றத்தில் எம்.பி.ஆகவோ அல்லது மேலவை எம்.பி. ஆகவோ இருந்தால் நன்றாக டெல்லியில் கோலோச்ச முடியும்.
பெயர் எண் 8 (M. ANBAZHAGAN = (4+1+5+2+1+7+5+1+3+1+5) 35 = 3+5 = 8)
எண் 8 சனியை குறிக்கும் மு.அன்பழகன் ஒருவரை திட்டினால் எதிராளிக்கு வளர்ச்சி, மாறாக இவரை திட்டினால் எதிராளி வீழ்ச்சி அடைவார். எண் 8ஐ விமர்சிக்க எண் 9ஆல் மட்டுமே முடியும். அதனால் இவரை திட்டினால் எண் 9ல் பிறந்த கே.என்.நேருவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.
எண் 8 நியாயாதிபதி. நீதிமான். இவர்களைப் போல் இரக்க குணம் உள்ளவரும் இல்லை. இவர்களைப் போல் கொடூரமானாவர்களும் இல்லை. இவர்கள் வாழ்ந்தபின் பேசப்படுவார்கள். அடுத்தவருக்கு எந்த வேலையையும், எந்த பதவியையும் போராடி வாங்கித்தர முடியும். இவர்கள் அடுத்தவர்களுக்காக வாழ்பவர்கள். தனக்கு என்று வரும் பொழுது தான் நினைத்த பதவி கிடைப்பது இல்லை என்று வருத்தப்படுவார்கள். இவ்வெண் படி கட்சி அல்லது பொது விஷயங்கள் சார்ந்து அதிக பிரச்சினைகள் சமரசம் செய்து வைக்க வேண்டி இருக்கும்.
மு.அன்பழகன் திருச்சி மாநகராட்சி மேயராக ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு கிடைத்தது துணைமேயர் பதவி. அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினராக விரும்பி போட்டி இட்டார். ஆனால் அதில் தோல்வி அடைந்தார். இப்போது மேயருக்கு ஆசைப்படுகிறார். ஒருவேளை வேறு பெரிய பதவி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
கூட்டு எண் 8ல் பிறந்த திருச்சியை சேர்ந்த அமைச்சர் வளர்மதி கவுன்சிலராக தேர்வான போது என்னிடம் மேயர் ஆக முடியுமா எனக் கேட்டார். நான் நீங்கள் எண் 8 காரர். அதனால் நீங்கள் ஆசைப்பட்டது. கிடைக்காது. வேறு ஒரு நல்ல பதவி கிடைக்கும் என்றேன். வளர்மதி அவர்களின் இராசி முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை சிறையில் தள்ளி ஶ்ரீரங்கத்தில் இருந்து எம்.எல்.ஏ.வாகி எதிர்பாராமல் அமைச்சரும் ஆனார்.
அதேபோல் மு.அன்பழகன் அவர்கள் ஆசைப்படாத ஒரு பதவி காத்து இருக்கிறது.
பெயர் எண் 1 (MU.ANBHALAGAN 4+6+1+5+2+5+1+3+1+3+1+5 =37 = 3+7 = 10 = 1)
மு.அன்பழகன் சில நாட்கள் தன் பெயரை அவரின் நண்பர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாக எண் 8ல் இருந்து எண் 1க்கு மாற்றி இருந்தார். அப்பொழுது அம்மையார் ஜெயலலிதா மு.அன்பழகன் மீதும் வழக்கு தொடுத்திருந்தார். எண் 8 தண்டனையை வாங்கி கொடுக்கும். ஆனால் எண் 1 சிறை வாழ்க்கை இல்லை, தண்டனையும் கிடைக்காது. ஆகவே எண் 1 வரும்படி, தன் பெயரை மாற்றி இருந்தார். அதனால் மு.அன்பழகன் மீது இருந்த வழக்குகள் தள்ளுபடி ஆனாது. ஆனால், அவர் மீண்டும் எண் 8ல் இருந்த பழைய பெயருக்கே தன் பெயரை மாற்றிக் ;கொண்டார். மு.அன்பழகன் தோல்வி பயத்தில் இருந்தால் வெற்றி நிச்சயம்.
