திருச்சியில் சரியா 12 மணி நேரத்துல எல்லா இடங்களையும் பாக்கலாம் – எப்படி தெரியுமா?

0
1

தமிழகத்தின் தலைநகரமா ஆக்கப்பட பரிசீலிக்கப்பட்ட ஒரு இடம் திருச்சி. இன்னைக்கும் தமிழகத்தோட இருமுனைகள்ல இருக்குற மக்கள் ஒரு பக்கத்துல இருந்து இன்னொரு பக்கம் போக இந்த வழிய கடந்துதான் போகமுடியும். கிட்டத்தட்ட தமிழகத்தின் நடு மையத்தில் அமைந்திருக்கிறது.

 

இங்கு நம்மில் பலருக்கு சுற்றுலா சென்ற அனுபவம் இருக்கும். அப்படி திருச்சியில் வெறும் பன்னிரெண்டு மணி நேரத்தில் எங்கெல்லாம் செல்லமுடியும் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். பயனுள்ள தகவல்கள் சுற்றுலா பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இதைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

 

1 உங்களிடம் நேரம் குறைவு என்பதால் ஏற்கனவே சென்று வந்த இடங்களைத் தவிர்ப்பது ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

2

2 அதிகம் பேர் சுற்றுலா செல்வது சற்று சிரமமானது இது இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று பேர் செல்லத்தகுந்த பயணம் மட்டுமே…

3 முடிந்தவரை அனைத்தையும் திட்டமிட்டுக்கொண்டு செல்லவும்.

4 குடிநீர், ஸ்நாக்ஸ் போன்றவற்றை கையில் கொண்டு செல்வது சிறந்தது. இங்கு சுற்றுலாவுக்கு மட்டுமே செல்கிறோம் ஷாப்பிங்குக்கு அல்ல என்பது நினைவில் இருக்கட்டும்.

 

திருச்சி – விராலி மலை | காலை 9 மணி | பயணத் திட்டம்

 

காலை 9 மணிக்கு முன்னரே காலை சிற்றுண்டியை முடித்துக்கொள்வது சிறந்தது. சரியாக திட்டமிட்டு பயணித்தால் திருச்சியை சிறப்பாக சுற்றிவிட்டு வரலாம். திருச்சியில் நீங்கள் தங்கியிருந்தால் அநேகமாக வயலூர் சாலை, தில்லை நகர், திருச்சி முதன்மை சாலை, மதுரை சாலை, தஞ்சை சாலை, டி ரெங்கநாதபுரம், காட்டுர், எம்எம் நகர் ஆகியவற்றில் ஒன்றிலோ அல்லது அதன் அருகிலேயோதான் தங்கியிருப்பீர்கள். எனவே உங்களுக்கு மற்ற எல்லா இடங்களையும் விட விராலி மலை முருகன் கோவில்தான் கொஞ்சம் தொலைவு. எனவே நம் பயணத்தை முதலில் விராலி மலை நோக்கி செலுத்துவோம். . விராலிமலை பயணத்திட்டம் 9 மணிக்கு நீங்கள் புறப்பட்டால், சொந்த வாகனத்தில் பயணிக்க அதிகபட்சம் அரை மணி நேரமும், பேருந்தில் பயணிக்கவேண்டியிருந்தால் கூடுதலாக பத்து நிமிடங்களும் எடுக்கும். போய் திரும்ப ஒன்றரை மணி நேரம் எனவும், அங்கு செலவிட ஒரு மணி நேரம் என எடுத்துக்கொண்டாலும், இரண்டரை மணி நேரங்களில் மீண்டும் திருச்சி மாநகரத்தை அடைந்துவிடலாம். விராலி மலை முருகன் கோவிலில் என்ன இருக்கு | வரலாறு | பூசை நேரம் | முகவரி | புகைப்படங்கள் விராலிமலை முருகன் கோவில் திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள விராலிமலையின் மலை மேல் அமைந்துள்ளது. 207 படிகளை கடந்தால் கோயிலை அடையலாம். கோயிலுக்கு செல்லும் வழியில் பார்வையாளர்கள் தங்குவதற்கு ஓய்வு அறைகள் என கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படும் மண்டபங்கள் உள்ளன. இங்கு நடத்தப்படும் பல சடங்குகள் மத்தியில் இறைவன் தண்டாயுதபாணிக்கு சுருட்டு வழங்கும் ஒரு சடங்கு இருக்கிறது இந்த சுருட்டு சந்தன கலவையால் உருவானது. அது கோவிலின் முக்கிய சடங்குகளில் ஒன்றாகும். இக்கோவில் பழத்தோட்டம் மற்றும் பல குரா மரங்களால் சூழப்பட்டுள்ளது இந்த மரங்கள் விராலிமலை கோயிலின் முருக கடவுளுக்கு ஏறெடுக்கப்படும் பிரார்த்தனையின் போது பண்டைய யோகிகள் மற்றும் முனிவர்களால் பயன்படுத்தப்பட்டன.

 

4

 நண்பகல் 11.30 மணி | முக்கொம்பு அணை

 

நெடுஞ்சாலை எண் 38 இந்த சாலையில் டோல்கேட் இருக்கிறது. இன்னொரு சாலையும் இருக்கிறது. இது நெடுஞ்சாலை எண் 83. வடுகப்பட்டி, இனாம்குளத்தூர் வழியாக திருச்சியை அடைவது அது. இல்லையென்றால் மதுரை திருச்சி நெடுஞ்சாலை வழியாக அடையமுடியும். திருச்சி மாநகரம் – முக்கொம்பு அணை | எப்படி செல்வது | பயண வழிகாட்டி மாநகரத்திலிருந்து முக்கொம்பு அணையை அடைய 40 நிமிடங்கள் எடுக்கும். பாலூர், ஜீயாபுரம் வழியாக முக்கொம்பு அணையை அடையலாம். இதற்கிடைப்பட்ட தூரம் 22 கிமீ ஆகும். முக்கொம்பு அணை முக்கொம்பு அணை காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் மேல் கட்டப்பட்டதாகும். இந்த அணை நகரில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி மாநகருக்கு நெருக்கமாக அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலமாக இது உள்ளது. இங்கு கேளிக்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மீன்பிடித்தல் மற்றும் ஒரு சில விளையாட்டுகள் என பல இடங்கள் உள்ளன. இதன் விளைவாக இந்த இடமானது மிகப்பிரபலமான சுற்றுலா தலமாகவும், வார இறுதியில் நேரத்தை செலவிடுவதற்கு ஏற்ற நுழைவாயிலாகவும் திகழ்கிறது. செலவிடும் நேரம் முக்கொம்பில் செலவிட ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்வோம். செல்வதற்கான 40 நிமிடங்களையும் சேர்த்து மதிய உணவுக்கான நேரம் வந்துவிடும். உணவைத் தேடி அலைய தேவையில்லை. அருகிலேயே அழகிய சுவையான பல வகை உணவுகளை பரிமாறும் உணவகங்கள் பல இருக்கின்றன. உணவு இடைவேளைக்கு பிறகு கொஞ்ச நேரம் பொறுத்திருந்து மதியம் 2 மணிக்கெல்லாம் மீண்டும் புறப்படவேண்டும்.

 

முக்கொம்பு – கல்லணை

 

முக்கொம்பிலிருந்து கல்லணை 31 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் பயண நேரம் 50 நிமிடங்கள் ஆகும். முக்கொம்பிலிருந்து உறையூருக்கு வந்து அங்கிருந்து பாப்பாங்குறிச்சி வழியாக கல்லணையை அடையவேண்டும். கல்லணை கிராண்ட் அணைக்கட்டு என்று அழைக்கப்படும் கல்லணை காவிரி நதி மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணையால் சூழப்பட்டுள்ள பகுதி 146.70 சதுர கி.மீ. பரப்பளவாகும். இந்த அணை சோழ வம்சத்தின் அரசன் கரிகாலன் மூலம் கி.பி. 1 வது நூற்றாண்டில் கட்டப்பட்டு இன்று வரை உபயோகத்தில் இருந்து வருகிறது. இது உலகின் மிக பழமையான கல்லால் கட்டப்பட்ட அணை என்பது தமிழர்கள் ஆகிய நமக்கு பெருமையை தருகிறது. கல்லணை என்ற பெயருக்கு கருங்ககற்களை கொண்டு கட்டிய அணை என்று பொருள்படுகிறது. இந்த கட்டமைப்பு முழுவதும் கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 329 மீ நீளமும் 20 மீ அகலமும் கொண்டது. இந்த அணை இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஒரு கால்வாய் ஸ்ரீரங்கத்திலும், மற்றொன்று கொள்ளிடம் என்று அழைக்கப்படும் வடக்கு கால்வாய் பூம்புகாரிலும் நிறைவு பெற்று இறுதியாக வங்காள விரிகுடாவில் சென்று கலக்கிறது. கல்லணையில் செலவிடும் நேரம் மாலை 3 மணிக்கெல்லாம் கல்லணைக்கு வந்துவிடுவோம். அங்கு செலவிட ஒரு மணி நேரம் என்றாலும், நான்கு மணிக்கு மலைக்கோட்டையை நோக்கி வீரநடை போடத் தொடங்கிவிடவேண்டும்.

 

மலைக்கோட்டை

 

கல்லணையிலிருந்து மலைக்கோட்டை 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது அரை மணி நேரப் பயணமாக இருக்கும். ஏறக்குறைய ஒரு மணி நேரம் பயணத்தில் செலவிட்டாலும், மாலை 5 மணிக்கு உச்சிப் பிள்ளையார் கோவிலை அடையலாம். முக்கிய நாள்கள், திருவிழாக் காலங்களில் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்போதெல்லாம் இரண்டு முதல் 3 மணி நேரங்கள் கோவிலுக்கு வந்து திரும்ப ஆகிவிடும். மற்ற நாட்களில் 2 மணி நேரம் போதுமானது. உச்சிப்பிள்ளையார் கோவில் | இரவு 7 மணி | பயணத்தை நிறைவு செய்வோம் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் விநாயகர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது மலைக்கோட்டை மேல் அமைந்துள்ள ஒரு கோவிலாகும். இந்த கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான ஒன்று. 83 மீ உயரம் கொண்ட இந்த கோயில் மதுரை நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டது. மலைக்கோட்டை மீதுள்ள கோயில்கள் கட்டடக்கலையின் அதிசயங்கள். இவை இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.

 

வயலூர் முருகன் கோவில்

 

மலைக்கோட்டையிலிருந்து வயலூர் அரைமணி நேரத்திலும், வயலூர் முருகன் கோவில் கூடுதலாக பத்து நிமிடங்களிலும் அடையும் வகையில் அமைந்துள்ளது. மாலை 7 மணிக்கெல்லாம் உச்சிப்பிள்ளையார் கோவிலிருந்து இறங்கிவிட்டாலும், போக்குவரத்து நெரிசல் இரவு நேரம் காரணமாக வயலூரை வந்தடைவது கொஞ்சம் தாமதமாகும். வயலூர் வயலூர் முருகன் கோவில் திருச்சியில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இக்கோவில் ஆதி வயலூர், குமார வயலூர், வன்னி வயலூர் மற்றும் அக்னீஸ்வரம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் சிவன், நடராஜர், ஸ்ரீ பொய்ய கணபதி, வள்ளி மற்றும் தெய்வணை ஆகியவைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல சன்னதிகள் உள்ளன. கோவில் இங்குள்ள நடராஜர் சிலைக்கு உள்ள விஷேசம் என்னவென்றால் அதன் இரண்டு பாதங்களும் தரையில் படாமல் அமைந்துள்ள ஒரு சிறப்பு உண்டு. இந்த சிலைகளுக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஒரு திருவிழாவானது கொண்டாடப்படுகிறது. இப்படியாக இரவு 8, 8.30 மணிக்கெல்லாம் நமது பயணத்தை நிறைவு செய்துவிடலாம். நீங்கள் இனி உங்கள் அறைக்கு செல்வதாக இருந்தாலும் சரி, ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் என எங்கு செல்வதாக இருந்தாலும் இங்கிருந்து வெறும் அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். என்ன நண்பர்களே 12 மணி நேரத்தில் திருச்சியின் முக்கிய இடங்களைச் சுற்றிப் பாத்துட்டீங்களா… அடுத்து எந்த இடத்துக்கு போகலாம்.. ?

3

Leave A Reply

Your email address will not be published.