உன்னை முழுசா படம் பிடிச்சுட்டேன்.. என்னை நீ கெஞ்சணும்.. திருச்சியில் கணக்கு டீச்சரை மிரட்டிய இளைஞர்.. ! –

0

திருச்சி: “உன்னை முழுசா கேமிராவில் படம் பிடிச்சிட்டேன்.. அதனால கல்யாணம் பண்ணிக்க நீ என்கிட்ட கெஞ்சணும்” என்று கணக்கு டீச்சரை இளைஞர் ஒருவர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி டவுன்ஹால் ரோட்டில் ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார் ஒரு பெண். வயசு 29 ஆகிறது. புதுக்கோட்டையில் உள்ள ஒரு பிரைவேட் ஸ்கூலில் கணக்கு டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.

 School Teacher complaint against youth in Trichy Collectorate

இந்நிலையில், இன்று கலெக்டர் ஆபீசில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கணக்கு டீச்சர் கலந்து கொண்டதுடன், அதிகாரிகளிடம் ஒரு மனுவும் அளித்தார்.

food

அதில் அவர் சொல்லி உள்ள சுருக்கம் இதுதான்: “எனக்கு பெற்றோர் இல்ல. நான் முதலில் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தேன். அதற்காக கோட்டையில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்தேன். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

கல்யாணம் செய்து கொள்வதாகவும் சொன்னார். பின்னர் அவர் என்னை டவுன்ஹால் ரோட்டில் ஒரு குவார்ட்டஸில் குடி வைத்தார். ஒருநாள் எதேச்சையாக வீட்டின் ஜன்னலில் பார்த்தால், ஒரு கேமிரா இருந்தது. அதிர்ச்சியடைந்த நான் இதை பற்றி காதலனிடம் கேட்டேன்.

அதற்கு “உன்னை நான் முழுசாக படம் பிடிச்சிட்டேன். என்கிட்ட நீ மன்னிப்பு கேட்க வேண்டும், கல்யாணம் செய்து கொள்ள கெஞ்சவும் வேண்டும். அப்படி செய்யவில்லையானால் ரகசிய கேமிராவில் உள்ளதை எல்லாம் இணையத்தில் போட்டுவிடுவேன்” என்று மிரட்டுகிறார்.

போலீசில் புகார் அளித்தேன், நடவடிக்கை இல்லை, அதனால் இளைஞர் மீது நடவடிக்கை வேண்டும்” என்று கூறியிருந்தார். இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்துமாறு கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.