மூக்கு பாதையை இப்படி சுத்தம் செய்யலாம் !

மூக்கு பாதையை சுத்தம் செய்யும் ஜலநேதி
உடலில் தங்கும் கழிவுகள் பல்வேறு நோய்களுக்கு காரணம் ஆவதால் யோகக்கலையில் நமது முன்னோர்கள் ஷட்க்ரியா முறையில் உடல் உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்ற பல்வேறு வழிகளை பின்பற்றி உள்ளார்கள்.
கழிவுகளை அகற்ற கூடிய பயிற்சிக்கு க்ரியா என்கின்றனர்.


க்ரியாவில் கபாலபாதி, நேதி ,தெளதி,நெல்லி, பஸ்தி, த்ராடகா போன்ற கிரியாக்கள் ஷட்க்ரியாக்களாக உள்ளன.
அதில் மூக்கு பாதையை தூய்மைப்படுத்தும் ஜலநேதி பயிற்சியினை குறித்து திருச்சி அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் பயிற்சி அளித்து பேசுகையில், ஜலநேதி நாசிகளை தூய்மைப்படுத்தும் பயிற்சியாகும்.பயிற்சிக்கு ஜலநேதி குடுவை இளஞ்சூடான நீரை எடுத்துக் கொள்ளவும். இரண்டு அடி இடைவெளி விட்டு இரண்டு கால்களையும் அகற்றி நின்று கொண்டு உப்பு கரைத்த இளஞ்சூடான நீரை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் . சற்றே முன் குனிந்து கழுத்தை சாய்த்து கொண்டு நேதி குடுவையினை மூக்கு வழியாக வலது நாசியில் நுழைத்து கொள்ளவும். சுவாசம் விடுவதற்கு வாயைத் திறந்து வைத்துக்கொண்டு நேத்திக் குடுவையினை லேசாக சாய்க்கும்போது நீரானது வலது நாசியில் உள் சென்று இடது பக்க நாசி வழியாக வெளிவரும். நேதி குடுவையில் உள்ள நீர் முழுவதும் ஒரு பக்க நாசிக்கு பயன்படுத்தவும். இதே முறையில் இடது நாசிக்கும் பயன்படுத்த வேண்டும் .வலது இடது நாசியில் பயிற்சி முடித்தவுடன் நீரை வெளியேற்ற நாசித்துவாரங்களை ஒவ்வொன்றாக அடைத்துக் கொண்டு மூச்சை வேகமாக வெளியேற்றவும்.
இவ்வாறு செய்வதனால் மூக்கினுள் உள்ள நீரும் கழிவுகளும் வெளியேறும். மூக்கில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் யோகா ஆசிரியர் ஆலோசனையின் பேரில் செய்ய வேண்டும்.
இப்பயிற்சியினால் சளி கழிவுகள் அகற்றப்படுகிறது. நாட்பட்ட தலைவலி மூக்கடைப்பு, தும்மல் போன்றவை நீங்கும் என்றார் மேலும் விவரங்களுக்கு யோகா சிரியர் விஜயகுமார், அமிர்தா யோக மந்திரம் 98424 12247 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
