புனித வின்சென்ட் தே பவுல் சபையின் 48 ஆம் ஆண்டு விழா !

0

புனித வின்சென்ட் தே பவுல் சபையின் 48ஆம் ஆண்டு விழா !

 

புனித வின்சென்ட் தே பவுல் சபையின் 48ஆம் ஆண்டு விழா மற்றும் கல்வி உதவி வழங்கும் விழா 2018-2019 புனித தெரசாள் ஆலயவளாகத்தில் உள்ள இருதயசாமி மக்கள் மன்றத்தில்  21.07.2018 மாலை 4.30 நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பங்குதந்தை அருட்பணி அருளானந்தம் தலைமை தாங்கினார். புனித வின்சென்ட் தே பவுல் சபையின் கிளைச்சபை தலைவர் மெற்றில்டா ராஜகுமாரி, திருச்சி மறைமாவட்ட கத்தோலிக்க சங்க தலைவர் ஜாக்கப் மற்றும் புத்தூர் வட்டார துணைத்தலைவர் எடிசன் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார்கள்.

 

சபையின் துணைத்தலைவர் பிலேந்திரன் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு  சிறப்பு விருந்தினராக கீரனூர் மறைமாவட்ட அதிபர்  அருட்பணி அருளானந்தம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மகளிர் மாண்பு நமது கடமை என்ற தலைப்பில் ஆசிரியை நிக்கோலா பிரின்சியும், பெண் ஆரோக்கியம் என்ற தலைப்பில் பாரதிதாசன் மகளிரியல் துறை பேராசிரியை முனைவர். முருகேஸ்வரியும் கருத்துரை வழங்கினார்கள்.

food

இச்சபையில் 25 ஆண்டுகளாக பல்வேறு பணிகள் செய்து வந்த முனைவர். ஆம்ஸ்ட்ராங் ராபி அவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தேசிய அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜோஷிபாவுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

 

48 ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் 36 தத்து மாணவர்களுக்கு தலா 1000 உதவி தொகையும், 20 தத்து குடும்பங்களுக்கு அரிசி மற்றும் உதவித் தொகையும், ஏழை மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகமும், இந்த சபையின் மூலம் தையல் பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு தையல் பயிற்சி சான்றிதழும் வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் சபையின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்ஙளுக்கு சபையின் கிளைச்சபை தலைவர் மெற்றில்டா ராஜகுமாரி நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார்.

 

விரிவாக்க அலுவலர் சகோதரர் நாதன் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

 

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.