துறையூர் அருகே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

0
Business trichy

துறையூர் அருகே வழக்கறிஞரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு வழக்கறிஞர் நல சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜசேகரன். இவர் கடந்த 18ம் தேதி உப்பிலியபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பச்சைமலை பகுதியில் உள்ள தண்ணீர் பள்ளம் கிராமத்தில் தனது கட்சிக்காரருக்காக நிலம் அளப்பதற்கு சர்வேயரை அழைத்துச் சென்றார்.

web designer

இந்நிலையில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வழக்கறிஞர் ராஜசேகரனை எதிர்தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ராஜசேகரனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து 4 நாட்களாகியும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

loan point

எனவே உடனடியாக வழக்கறிஞரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர் நல சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ராஜசேகரனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.