திருச்சி மவுண்ட் லிட்ரசி ஜீ பள்ளி மாணவன் மாயமாகி மீட்டது எப்படி ?

0
1

திருச்சி ரெட்டவாய்க்கால் எம்.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா, இவர் அந்த பகுதியில் நவனீதா அப்பார்ட்மென்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆந்திராவை சேர்ந்த இவர் திருச்சியில் உள்ள  செவுடாம்பியாக பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மவுண்ட் லிட்ரசி ஜீ  பள்ளியில்  நீட் கோச்சிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். 

இவர் நீட் கோச்சிங் பயிற்சியாளர் என்பதால்  குடும்பத்தோடு இடம் பெயர்ந்து இதே மவுண்ட் லிட்ரசி  7ம் வகுப்பு படிக்கிறார் அவருடைய மகன் குருரிஷித் படிக்கிறார். 

23/07/2019 மாலை அரசு மருத்துவமனை (GH) காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில் தனது மகன் குருரிஷித் (வயது 12)  உள்ள   பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், வழக்கம்போல்  காலையில்  செவுடாம்பியாக பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மவுண்ட் லிட்ரசி ஜீ பள்ளிக்கு சென்ற என் மகன் குருரிஷித் வீடு திரும்பி வரவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் GH போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

4

அதில் முதற்கட்டமாக விசாரணையில் போலீசார்  அவர் வீட்டில் உள்ள  சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்ததில் 4.30 மணிக்கு சிறுவன் பள்ளி விட்டு வீட்டிற்கு வந்ததும் பின்னர் மஞ்சள் நிற டீசர்ட்டுடன் வெளியே சென்றதும் தெரியவந்தது.

மேலும் பள்ளி விட்டு வந்த சிறுவன் தனது புத்தக பை, உணவு கொண்டு செல்லும் பை அனைத்தையும் கீழே லிப்ட் அருகே வைத்து விட்டு சென்றதாகவும் தெரியவருகிறது. எனவே போலீசார் ஒருபுறம் வீட்டில் சிறுவனை பெற்றோர்கள் எதும் கண்டிக்கப்பட்டு வெளியே சென்றிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கினார்கள். 

அதே நேரத்தில் மகன் காணமல் போனது குறித்து நீட் கோச்சிங்க ஆசிரியர் போலிஸ் விசாரணையில்  பள்ளியில்  நாங்க விசாரித்த பொது என் மகனை அங்க உள்ள டீச்சர் தானே ஏதோ கண்டிச்சிருக்காங்க, என்று என்னிடம் சொன்னார்கள். அதனால் வீட்டிற்கு வராமல் போயிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.  

2

அதே நேரத்தில் திருச்சி மாநகர காவல் துறையினர் துரிதமாக மாயமான சிறுவனை பற்றிய தகவல் ஏதும் கிடைத்தால் கீழ்கண்ட எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டி கேட்டுக்கொண்டுள்ளனர். 0431-2332566, 0431-2771629, 9445483947, 9498100632

இதை அடுத்து திருச்சி  போலிசார் நடத்திய அதிரடி சோதனையில் 24.07.2019 மணிக்கு  இரவு 11 மணியளவில் சிறுவன் தென்னூரில் ஒரு ஆட்டோகாரர் வீட்டில் இருந்து சிறுவனை போலிசார் மீட்டிருக்கிறார்கள்.

எப்படி மீட்டார்கள் என்று போலிஸ் தரப்பில் விசாரித்த போது. சிறுவனுக்கு தமிழ் தெரியாது இந்தி மட்டுமே தெரியும் என்பதால் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக  தில்லைநகர் பகுதியில் 11 கிராஸில் நின்று கொண்டிருக்கிறார்.

அப்போது அந்த பகுதியில்  இருந்தஆட்டோகாரர் ஒருவர் இந்த பையனிடம்  என்னப்பா தனியா நின்னுகிட்டு இருக்க எங்க போகணும், உங்க அம்மா அப்பா எங்கே என்று விசாரித்திருக்கிறார் . அந்த சிறுவன் தமிழ் தெரியாமல் இந்தியில் பேசி எனக்கு யாரும் இல்லை என்று சொல்லவும்  குழம்பி போன ஆட்டோகாரர் அப்படியே விட்டு செல்ல மனம் இல்லாமல் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.  அதே நேரத்தில் போலிஸ் கேமிராவில் கண்காணித்து ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்று  சிறுவனை கண்டுபிடித்து பெற்றொரிடம் ஒப்படைத்தனர்.

துரிதமாக செயல்பட்டு குழந்தையை கண்டுபிடித்த போலிசாருக்கு  கமிஷனர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

ஜெ.கே…

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்