சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி யில் கல்லூரிப்பேரவைத் தொடக்க விழா

0
1

சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் கடந்த 19ம் தேதி கல்லூரிப்பேரவைத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் சிறப்புரையாளராக திருச்சிராப்பள்ளி, உருமு தனலெட்சுமி கல்லூரியின் முதல்வர் முனைவர் இரவிச்சந்திரன்  கலந்து கொண்டார். இவ்விழாவில் துணைமுதல்வர் முனைவர் ம.வாசுகி மற்றும் கல்லூரிப் பேரவையின் பேராசிரியர்கள், பல்துறை பேராசிரியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.  கல்லூரி முதல்வர் முனைவர் பத்மாவதி   வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரிப்பேரவையின் மாணவியர் தலைவியாக வள்ளியம்மையும், துணைத்தலைவியாக யாழினிஸ்ரீ மற்றும் பேரவையின் உறுப்பினர்களாக.வான்மதி, வசுதாஸ்ரீ, ஸ்ரீனிவாசன்மிருதலா,.நிவேதா, ஹேமா, சிவகாமி ஆகியோர் அனைவரின் முன்னிலையிலும் பதவியேற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினர்  தம் உரையில், திருச்சிராப்பள்ளி மாநகரின் தலையாய கல்லூரியாக சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளைப் பெற்று பெண்கள் சிறப்படைவதற்குரிய  பெண்கல்வியைத் தருகின்ற கல்லூரியாக சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி திகழ்கிறது என்று புகழாரம் சூட்டினார்.

பெண்ணுரிமையை, பெண்ணின் மேன்மையை,  பக்திஇலக்கியங்கள், காப்பியங்கள், புராண, இதிகாசங்களின் வாயிலாகவும், வரலாற்றில் இடம்பிடித்த பெண்சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் வழியாகவும், விவேகானந்தர், அப்துல்கலாம் போன்ற ஆன்றோர், சான்றோர்களின் பொன்மொழிகள் வாயிலாகவும் எடுத்துக்கூறினார். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மக்கள் தகவல் தொடர்பு ஊடகங்கள் இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதலை தந்து கொண்டிருக்கின்றன. இளைய சமூகத்தினர் நாட்டை மதித்து, அரசை மதித்து, ஆன்மீக நாட்டத்துடன், பக்திஇலக்கியங்களைக் கற்று,  கல்வியில் சாதனைகளைப் படைத்து வாழ்வில் வெற்றியடைய வேண்டுமென்று கூறி னார். விழாவில் நிறைவாக வேதியியல்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்வளர்மதி நன்றி கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.