ஹாட்ஸ்ஆப்… திருச்சி காவல்துறை !

ஹாட்ஸ்ஆப்… திருச்சி காவல்துறை
சத்திரம் பேரூந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார நிகழ்வாக காவல்துறையினர் ஒரு விழிப்புணர்வு கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள்
தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் மைக்கில் விளக்கிச்சொல்லிக்கொண்டிருந்தார்.

நல்ல ப்ளோ
நல்ல குரல்வளம்
நெல்லை கண்ணன்
நாவுக்கரசர் சத்தியசீலன் இருவரின் பேச்சையும் குரலையும் அப்படியே கேட்டது போலிருந்தது…
ஆர்வம் தாங்கமுடியாமல் போய் உட்கார்ந்து கேட்டேன் பத்துநிமிடம்தான்
மணிப்பிரவாளமான
வார்த்தைச்சிதறல்.
கருத்தாழமிக்க
செறிவான அக்கரை.
தலைக்கவசத்தின்
முக்கியத்துவத்தை சொன்னார்…
வாகன ஓட்டிகள் காவல்துறையினர் ஹெல்மெட் இல்லாத வாகனங்களை பிடிக்க நிற்பதைப் பார்த்துவிட்டு மக்கள் எவரெவர் என்னென்ன ரியாக்சன் செய்வார்களோ அதையும் வெளிப்படையாக பேசி சொல்லிய போது
பார்வையாளர்கள்
வெகுவாய் ரசித்தனர்
ஒப்புக்கொண்டனர்.
புள்ளிவிவரத்தோடு
இதுவரை நடந்த ஆக்ஸிடென்டின் எண்ணிக்கை
கோர்ட்டும் காவல்துறையும் அரசும் கண்டிப்புகாட்டிய பிறகு
நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்துவிட்டது
என்பதை சொல்லும்போது
“உச்சு” கொட்டி வருத்தப்படாதவர்களே அங்கு இல்லை.
பத்து பேராசிரியர்கள்
ஒன்றாய்ச்சேர்ந்து அடாவடி மாணவனை திருத்த எடுக்கும் முயற்சி….அவரது பேச்சில் இருந்தது.
அவர் அரசியலுக்கு வந்தால் கட்டாயம் ஒரு பெரிய ரவுண்டு வருவார்.
கண்ணியமான
அழகான அவரின் பேச்சு காவல்துறையினர்மீது
ஒரு மதிப்பை மரியாதையை ஏற்படுத்தியது….
அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அவரின் பெயரை கவனிக்கவில்லை.
தெரிந்தவர்கள் அவரை அவசியம் பாராட்டுங்கள்.
விபத்தை அவர் விவரித்தவிதம்
இழப்பின் வலியை
அவர் எடுத்துச்சொன்ன
பாங்கு…
அவர் மெப்புக்கு மேலோட்டமாக பேசவில்லை…
டெடிகேஷனோடு
பேசிய அவர்
எனக்கு
ஹீரோவாகத் தெரிந்தார்
ஜீகே முரளீ
திருச்சி
