திருச்சி கல்லூரியில் 2 நாள் புகைப்பட பயிற்சி பட்டறை !

0
1

திருச்சி கல்லூரியில் 2 நாள் புகைப்பட பயிற்சி பட்டறை !

புகைப்பட பயிற்சி பட்டறை ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பாக இரண்டு நாள் புகைப்பட பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .

துவக்க விழாவில் கல்லூரி இயக்குனர் ராமானுஜம் தலைமை வகித்தார். பயிற்சிப் பட்டறை குறித்து அறிவியல் கல்விப்புல முதன்மையர் மது துவக்கவுரையாற்றினார். முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பிச்சைமணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்.

2

 

lifescape academy புகைப்படக் கலைஞர் பன். இறை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி அளித்தார். முன்னதாக விஷுவல் கம்யூனிகேஷன் துறைத்தலைவர் இசை செல்வப்பெருமாள் வரவேற்க, உதவிப்பேராசிரியர் நவரஞ்சனி நன்றியுரை ஆற்றினார்

 

பயிற்சிப்பட்டறை தொழில்நுட்ப அமர்வில் தொழிற்நுட்ப புகைப்படக் கலைஞர் பன்.இறை பயிற்சி அளித்து பேசினார்

 

புகைப்படம் என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. அதாவதுஒளியுடன் எழுதுதல்ஆகும்.புகைப்பட வரலாறு, புகைப்பட கருவி கட்டுப்பாடு ,புகைப்பட கலைஞனின் ஆர்வம், புகைப்பட கருவி வகைகள் ,ஒளி அமைப்பு உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

 

ஒளியின் நிலை ஒரு புகைப்படத்தை எவ்வாறு பாதிக்கிறது. மனநிலைவிளக்குகள் மற்றும் முக நிழல்களை உருவாக்குவது.வெவ்வேறு லைட்டிங் நிலைமைகள் மற்றும் ஆதாரங்கள் படத்தில் உள்ள வண்ணங்களை எவ்வாறு மாற்றுகின்றன.அதை எவ்வாறு சரிசெய்வது.இயற்கை மற்றும் செயற்கை ஒளி இரண்டிலும் கூடுதல் கட்டுப்பாட்டை எடுக்க அடிப்படை கருத்துக்களை எவ்வாறு பயன்படுத்துவது.

 

ஒரு புகைப்படத்திற்குள் ஒரு ஒளி பிடிக்கப்பட்ட விதம் இறுதிப் படத்தில் வியத்தகு விளைவைக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார்.

 

முன்விளக்குகள் பக்க விளக்குகள் பின் விளக்குகள் உள்ளிட்டவற்றை ஒன்றாகப்பயன்படுத்தினால், ஒளியின் திசையும் மென்மையும் ஒரு புகைப்படத்தில் வெவ்வேறு விளைவுகளையும் மனநிலையையும் உருவாக்க பயன்படும். கடினமான பக்க விளக்குகள் நிறைய நாடகங்களை உருவாக்குகின்றன,

 

அதே நேரத்தில் மென்மையான முன் ஒளி மென்மையான மனநிலையை உருவாக்குகிறது என ஒளியைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் நுட்பங்களை பயிற்சி அளித்தார்மேலும் இயற்கை ஒளிகளை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் நுட்பங்களை பயிற்சியளித்தார். நிறைவாக பயிற்சிப்பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு பங்கேற்றமைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டது

3

Leave A Reply

Your email address will not be published.