திருச்சியில் தொடர்ந்து வீசப்படும் சிசுக்கள் – அதிர்ச்சியில் அதிகாரிகள்

0
Business trichy

திருச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துறையூர் உப்பிலியபுரம் கல்லாங்குத்து அருகே பெருமாள் கோவிலில்  பிறந்து 3 மணி நேரமே ஆன  பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்ததை மீட்டனர். 

அதனைத்தொடர்ந்து மீண்டும் 19/07/19 அன்றுக் காலை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புள்ளம்பாடி வாய்க்கால் அருகில் படி கரையில் பெண் குழந்தை கிடந்து போலீசாரால் கண்டெடுக்கப்பட்டு குழந்தை உதவி எண் (1098) அதிகாரிகளால் மீட்கப்பப்பட்டுள்ளது.

Kavi furniture

மேலும் இதுதொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது அவ்வழியே சென்ற பொதுமக்கள் குழந்தை பற்றிய தகவல்களை மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர் என்றும்,

MDMK

அதன்மூலம் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் திருச்சி சேவை சைல்டு லைன்  தகவல் அளித்தர். அதன்மூலம் குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரி ஹசீனா குழந்தையை பார்வையிட்டார்.

இது தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகளிடம் பேசிய போது குழந்தைகளை பெற்று வளர்க்க முடியாதவர்கள், அரசு ஏற்படுத்தியுள்ள தொட்டில் குழந்தை திட்டத்தினில் சேர்த்துவிட்டு செல்லலாம், இதில் குழந்தை பற்றிய முழுவிவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் ஒருபோதும் குழந்தையின் பெற்றோர்கள் குறித்த விவரங்கள் யாருக்கும் அளிக்கப்படாது, எனவே குழந்தைகளை இதுபோன்று வீசி விட்டு செல்பவர்கள் இனி அப்படி செய்யமால் குழந்தைகள் உதவி எண் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டாலே போதும், அக்குழந்தைகள் பாதுகாக்கப்படும் என்றனர்.

மேலும் திருச்சியில் ஒரே வாரத்தில் இதுபோன்ற தொடர் சம்பவங்கள், அதிகாரிகளிடையே பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெ.கே….

Pranav city

Leave A Reply

Your email address will not be published.