தடயங்களைத்தேடி என்னும் வரலாற்று தொகுப்பு

0
D1

தடயங்களைத்தேடி என்னும் வரலாற்று தொகுப்பு

N2

வரலாறு பலஉண்மையையும், திருகுவேலையும், திணிப்பையும் தன்னகத்தே கொண்டது. சரியான வரலாற்றை பகுத்தறிவின் வாயிலாக உணர்ந்து, நாம்தான் கண்டறியவேண்டும். அவ்வாறு அறியும் தருணத்தில், புனைவும், புரட்டும் காணாமற்போய்விடும். கடந்த காலத்தை பற்றிய அறிவு இல்லாமல், நிகழ்காலத்தை புரிந்துகொள்ள முடியாது. கடந்தகால நிகழ்வுகளை ஆழ்ந்து உணர்ந்து, அதன்வாயிலாக நம் நிகழ்காலத்தை புரிந்து கொண்டால்தான். அறிவார்ந்த சமூகமாக நம் நிகழ்காலத்தை முன்னெடுக்க முடியும்.
அந்த வகையில் நம்முடைய வரலாற்றை அறிந்து கொள்ள தொல்பழங்காலம், பெருங்கற்காலம், சங்ககாலம், வரலாற்று காலம் தொடர்பாய் 19 கட்டுரைகள், இரு வரலாற்று நாவல்கள், முக்கிய கல்வெட்டுகள், அரிய புகைப்படங்கள், அதுதொடர்பான ஓவியங்கள் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியதே தடங்களைத்தேடி புத்தகம்.
வரலாற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்புத்தகத்தை கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழு தலைவர் கோமகன், கும்பகோணத்தில் உள்ள பாலாஜி மஹாலில் வரும் 25ம் தேதி வெளியிட உள்ளனர். அரியலூர், அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் இல.தியாகராஜன் மற்றும் புதுக்கோட்டை தொல்லியல் கழக வரலாற்று ஆய்வாளர் கரு.இராஜேந்திரன் பெற்றுக்கொள்கின்றனர். யாதும் ஊரே யாவரும் கேளீர் மற்றும் செலிபிரேட் காஞ்சி அமைப்பின் சார்பில் திருச்சி பார்த்தி மற்றும் இளையராஜா ஆகிய இரு வரலாற்று ஆர்வலர்கள் இப்புத்தகத்தை எழுதியுள்ளனர். துவக்கநிலை வரலாற்று ஆர்வலர்கள் தவறவிடக்கூடாதா புத்தகங்களில் ஒன்று தடங்களைத்தேடி…

N3

Leave A Reply

Your email address will not be published.