விபத்துகளை உள்ளாக்க காத்திருக்கும் மின்கம்பங்கள் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாதா மாவட்ட ஆட்சியர்

0
gif 1

விபத்துகளை உள்ளாக்க காத்திருக்கும் மின்கம்பங்கள்
கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாதா மாவட்ட ஆட்சியர்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கவிபாரதி நகர் 38வது வார்டில் பொதுமக்களின் அடிப்படை வசதி வேண்டி 8 அம்ச கோரிக்கைகளுடன் கடந்த 1.2.19 அன்று மாவட்ட ஆட்சியரிடம் கவிபாரதி நகர் குடியிருப்போர் மக்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

 

 

gif 4

அவற்றில் கவிபாரதி நகரில் பழுதடைந்துள்ள 7 மின் கம்பங்களை மாற்றியமைத்து தரவேண்டும் என்பதும் ஒரு கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் மனு கொடுத்து 5 மாதங்கள் ஆகியும், அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, மின்கம்பங்களின் நிலை தற்போது மிகவும் மோசமாகி உள்ளதால், எந்த நேரத்திலும் விபத்து நேர்ந்து உயிர் பலி நேரலாம் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.